மக்களோடு மக்களாக சுற்றும் மர்ம நபர் - போலி ஆதார் எண் வைத்து மோசடியாக டெல்லி "தனியார்" மாநாட்டுக்கு சென்றது அம்பலம்!

மக்களோடு மக்களாக சுற்றும் மர்ம நபர் - போலி ஆதார் எண் வைத்து மோசடியாக டெல்லி "தனியார்" மாநாட்டுக்கு சென்றது அம்பலம்!

Update: 2020-04-16 11:51 GMT

கடந்த மாதம் டெல்லி "தனியார்" மாநாட்டுக்கு தமிழ்நாட்டிலிருந்து விமானத்தில் சென்ற ஒருவர், தனது ஆதார் எண்ணைப் போலியாகக் காண்பித்து ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தில் கொரோனா தொற்று நோய் உறுதி செய்யப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 90 சதவீதம் பேர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என்பது உறுதியாகியுள்ளது. 

திருச்சி மாவட்டத்தில் முசிரிக்கு அருகிலுள்ள வலவந்தி கிராமத்தில் போலீசார் நடத்திய விசாரணையை தொடர்ந்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததாக தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

வலவந்தி குடியிருப்பாளரான செல்லாதுரையின் ஆதார் எண்ணை தப்லீஹி ஜமாஅத் நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஒருவர் பயன்படுத்தியதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

தனது வீட்டோடு இணைக்கப்பட்ட ஒரு குட்டி கடையை நடத்தி வரும் செல்லாதுரை,   நிஜாமுதீன் நிகழ்ச்சிக்கு தான் செல்லவில்லை என்று அதிகாரிகளிடம் கூறினார். அவர் டெல்லிக்குச் சென்றதாகக் கூறப்படும் காலகட்டத்தில் அவர் கிராமத்திற்கு வெளியே செல்லவில்லை என்றார். கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதிலும் அவருக்கு கொரோனா இல்லை என்று முடிவுகள் வெளியாகியுள்ளது. 

இதனால் கூடுதல் விவரங்களை அறிய அதிகாரிகள் விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது செல்லதுரையின் ஆதார் எண்ணை தவறாகப் பயன்படுத்தி சுபீர் அலி என்ற நபர் டெல்லிக்குச் சென்றுவிட்டார் என்பது பின்னர் தெரியவந்தது. இந்த நிலையில் அதிகாரிகள் உண்மையில் டெல்லிக்கு விமானத்தில் பயணித்த நபரைத் தேடி வருகின்றனர். 

Source: https://swarajyamag.com/insta/concern-for-tamil-nadu-a-tablighi-jamaat-member-attends-nizamuddin-markaz-events-faking-aadhaar-number

Similar News