ஆப்கன்: விமான நிலையத்தில் கூட்ட நெரிசல் காரணமாக மக்கள் பலியாகி உள்ளார்களா?
காபூல் விமான நிலையத்தில் நாட்டை விட்டு வெளியேறும் முயற்சியில் ஏற்பட்ட நெரிசலில் 7 ஆப்கன் மக்கள் இறந்ததாக பிரிட்டன் செய்தி.
தற்போது ஆப்கானிஸ்தானில் ஏறத்தாழ 20 ஆண்டுகள் நடந்த உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி உள்ளனர். எனவே இருபது ஆண்டு காலமாக அவர்கள் பல்வேறு கலவரங்களில் ஈடுபட்டு நகரத்தை தாக்கியுள்ளார்கள். குறிப்பாக 20 ஆண்டு காலமாக அமெரிக்க படை அங்கு இருந்தது. ஆனால் அமெரிக்க படை வெளியேறிய பிறகு அவர்கள் நகரங்களுக்குள் நுழைவது மிகவும் சுலபமாகி விட்டது. ஆனால் காபூல் விமான நிலையத்தில் இருந்து இன்னும் அமெரிக்க வீரர்கள் வெளியேறவில்லை. இதன் காரணமாக மட்டுமே தலிபான்களால் உள்நுழைய முடியவில்லை.
இது உலகளவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. தலீபான்களால் எந்த நேரமும் எதுவும் நேரலாம் என்ற பீதியில் ஆப்கனியர்களும், உலக மக்களும் உள்ளனர். இதனால் அங்குள்ள வெளிநாட்டினர் தங்கள் தாய்நாட்டுக்கு திரும்பி விட வேண்டும் என்று என்ற ஒரே எண்ணத்தில் பயணத்திற்காக எதிர்நோக்கிய காத்து கொண்டிருக்கிறார்கள். தலீபான்கள் ஆட்சிக்கு பயந்து ஆப்கானிஸ்தான் மக்கள் சிலரும் வெளிநாடுகளுக்கு தப்ப முயன்று வருகின்றனர்.
இதனால், காபூல் விமான நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில், காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஆப்கானிஸ்தான் மக்கள் 7 பேர் உயிரிழந்ததாக பிரிட்டன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, காபூல் விமான நிலைய வாயிலுக்கு வெளியே அச்சுறுத்தல் இருப்பதால் அமெரிக்க மக்கள் காபூல் விமான நிலையத்தை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்க தங்கள் நாட்டு மக்களுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரிட்டன் அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த செய்தி மிகவும் பரபரப்பாகவும் பார்க்கப்படுகிறது.
Image courtesy:The hindu news