அலெக்ஸாண்டர் கிராஹம் பெல் வாழ்க்கை சொல்வதென்ன? வெல்லவது மட்டுமல்ல வெற்றி

அலெக்ஸாண்டர் கிராஹம் பெல் வாழ்க்கை சொல்வதென்ன? வெல்லவது மட்டுமல்ல வெற்றி

Update: 2020-01-17 03:00 GMT

அலெக்ஸாண்டர் கிராஹம்
பெல் அவர்களின் வாழ்வில் நிகழ்ந்த சிலவையை முன்வைத்து:


வெற்றி என்பது நம்
உள்ளத்தை பின் தொடர்வது


வாழ்க்கை முழுவதும்
காது கேளாத பிள்ளைகளின் படிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார் பெல். இந்த
ஆர்வமும், அர்பணிப்பும் அவரை
தொலைப்பேசி கண்டுபிடிப்பு என்ற பெரும் சாதனைக்கு ஈட்டுசென்றது


வெற்றி என்பது நாம்
கொண்டுள்ள பார்வை


தொலைப்பேசி
கண்டுபிடிப்புக்கு பின், பெல் தன் தந்தைக்கு
ஒரு கடிதம் எழுதினார். "ஒரு நாள் வரும். தண்ணீர், காஸ் இணைப்புகள் போல் ஒவ்வொறு வீட்டின் மீதும்
தொலைப்பேசி வைர்கள் கிடக்கும். மனிதர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாமலேயே
ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வார்கள்"


வெற்றி என்பது
கூர்ந்து கவனித்தல்


பெல் பியானோ
வாசிக்கும் கலைஞர். ஒரு பியானோவில் ஓர் கார்ட்(chord ) அடைத்து கொண்டால் அதை அடுத்த அறையில் இருக்கும்
இன்னொரு பியானோ கார்ட் எதிரொலிக்கும். என்பதை கூர்ந்து கவனித்தார். கார்டுகள்
காற்றில் பயணித்து, அதே அலைவரிசையில்
அதன் அடுத்த முனையில் அதிரும் தன்மை கொண்டது என்பதை உணர்ந்து கொண்டார். காலங்கள்
கடந்தது, இந்த சிறு அவதானிப்பு
அவருப்பு ஒரு பெரும் சாதனையை நிகழ்த்த விதையாக அமைந்தது.


வெற்றி என்பது
இன்னலில் விளைவது


பெல் தனக்கென ஒரு
கொத்து இன்னல்களை, துன்பங்களை
வைத்திருந்தார். அதிலொன்று, 19ஆம் நூற்றாண்டின்
இறுதியில் காசநோய் உச்சத்தில் இருந்த சமயம். அவருடைய இரண்டு சகோதரர்களும் 4 மாத இடைவெளியில் இந்நோய் தாக்கப்பட்டு பெரும்
அவதியுற்றனர். பெல் அவர்களும் அவருடைய 23
ஆம் வயதில் இந்நோயை எதிர்த்து போராடினார்.


வெற்றி என்பது
பெருந்தன்மை


தன்னுடைய எண்ணங்கள்
வெற்றி பெரும் என்ற சிந்தனையில் பெல் கொண்டிருந்த முனைப்பும், எடுத்துக்கொண்ட வேளையில் அவருக்கு இருந்த
உறுதியையும், உழைப்பையும்
அங்கரிக்கும் பொருட்டு ஹெலன் கெல்லர் அவருடைய சுயசரிதையை பெல் அவர்களுக்கு
சமர்பணம் செய்தார்.


வெற்றி என்பது
சரியாக வெளிப்படுத்துவது


தொலைப்பேசி
கண்டுபிடிக்கப்பட்ட பின் அதை செண்டேனியல் பொருட்காட்சியில், பிலிடெல்பியா நாட்டில் 1876 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தார் பெல்


வெற்றி என்பது
பகிர்ந்து கொள்ளுதல்


அறிவியல் மீது
தனக்கிருந்த காதலால், அவருடைய
கண்டுபிடிப்புகள் அவருக்கு கொடுத்த வெற்றியால் சாமனியமக்களும் அறிவியல் குறித்து
அறிந்து கொள்ள வேண்டும் என பல பொருளாதார ரீதியான மற்றும் எழுத்து ரீதியான உதவிகளை
பெல் அவர்கள் சமூகத்திற்க்கு ஆற்றினார்


Similar News