தூய்மை குடிநீர் திட்டத்தின் கீழ் மத்திய அரசு புதிய முயற்சி - அங்கன்வாடி குடிநீர் இணைப்பு 82% அதிகரிப்பு!

அங்கன்வாடி மையங்களில் தூய்மைக் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது.;

Update: 2023-02-08 00:13 GMT

தூய்மை குடிநீர் திட்டத்தின் கீழ் மத்திய அரசு பல்வேறு புதிய முயற்சி எடுத்துக் கொண்டு வருகிறது. குறிப்பாக வீடுகளில் இருக்கும் பெண்களுக்கு தூய்மையான குடிநீரை கொடுக்கும் நோக்கில் ஜல்ஜீவன் மிஷின் தொடங்கப்பட்ட தற்பொழுது வெற்றி நடை போட்டு வருகிறது. அந்த வகையில் வீடுகளில் மட்டுமல்ல பள்ளிகள் குழந்தைகள் மற்றும் அங்கன்வாடி நிலையங்களையும் தூய்மை குடிநீர் இணைப்பு ஏற்படுத்தும் நோக்கில் மத்திய அரசுகளும் இருக்கிறது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வரும்போது குறிப்பிடத்தக்கது.


அங்கன்வாடிகளில் படிக்கும் குழந்தைகள் தூய்மையான குடிநீரை பருகும் பொழுது அவருடைய உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் மேம்படும் என்று கருத்தில் தற்போது ஆரோக்கியமான தூய கூட்டு நீரை கொடுக்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்ட பல்வேறு திட்டத்தை அறிமுகப் படுத்தி இருக்கிறது. பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் குழாய் மூலம் குடிநீர் வழங்குவதற்காக அக்டோபர் 2, 2020 அன்று, நீர்வள இயக்கத்தின் கீழ் நாடு தழுவிய இயக்கம் தொடங்கப்பட்டது.


இதன் மூலம் 3.2.2023 அன்றைய நிலவரப்படி, 2019 ஆகஸ்ட் மாதம், பள்ளிகளில் 4.47 லட்சம் குடிநீர் இணைப்புகள் இருந்த நிலையில், தற்போது 8.99 லட்சமாக குடிநீர் இணைப்புகளாக அதிகரித்துள்ளன. 2019 ஆகஸ்ட் மாதம், அங்கன்வாடி மையங்களில் 4.43 லட்சம் குடிநீர் இணைப்புகள் இருந்த நிலையில், தற்போது 9.22 லட்சம் குடிநீர் இணைப்புகளாக  அதிகரித்துள்ளன. இத்தகவலை மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் திரு பிரலாத் சிங் படேல் மாநிலங்களவையில் இன்று தெரிவித்தார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News