தனியார் பெண் ஊழியர்களுக்காக கொள்கையா.? மெனோபாஸ் நிலை என்பது வயது முதிர்வின் வழக்கமான ஒன்று - மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி.!

தனியார் பெண் ஊழியர்களுக்காக கொள்கையா.? மெனோபாஸ் நிலை என்பது வயது முதிர்வின் வழக்கமான ஒன்று - மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி.!

Update: 2019-12-07 02:34 GMT

மெனோபாஸ் நிலையை எட்டிய அரசு மற்றும் தனியார் பெண் ஊழியர்களுக்கு கொள்கை எதுவும் வகுக்கப்படவில்லை என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார் இதுதொடர்பாக மக்களவையில் கேள்வி நேரத்தின்போது விழுப்புரம் எம்பி ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு, மெனோபாஸ் நிலை என்பது வயது முதிர்வின் வழக்கமான ஒன்று என தெரிவித்தார்.


மேலும் இந்த நிலையை எட்டும் பெண்களில் சிலர் உடல் மற்றும் மன ரீதியான அழுத்தங்களை எதிர்கொள்வதாக தெரிவித்த அமைச்சர் ஸ்மிருதி இரானி அது தொடர்பான உறுதியான ஆய்வுகளை மேற் கொள்ளாமல் எவ்வித கொள்கைகளையும் வகுக்க முடியாது எனவும் தெரிவித்தார்.


மேலும் இதுதொடர்பாக முடிவுகள் எடுப்பதற்கு முன்பாக அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்டவர்கள், நிபுணர்கள் இடமும் ஆலோசிக்கப்படும் என தெரிவித்தார்,ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இதுவரை 50 லட்சம் பெண்கள் மார்பக புற்றுநோய்க்கும், பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி ஜூபின் இரானி தெரிவித்தார்.


Similar News