வெடித்தது இந்தியா-சீனா மோதல்! தமிழகத்தை சேர்ந்த இராணுவ வீரர் பழனி வீர மரணம்! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை!

வெடித்தது இந்தியா-சீனா மோதல்! தமிழகத்தை சேர்ந்த இராணுவ வீரர் பழனி வீர மரணம்! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை!

Update: 2020-06-16 09:05 GMT

இந்தியா - சீனா எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் நேற்று இரவு சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் 45 வயது இந்திய ராணுவ அதிகாரி மற்றும் 2 ராணுவ வீரர்கள் மரணமடைந்துள்ளனர்.

இந்தியா – சீனா எல்லையில் கால்வான் பள்ளத்தாக்கில் விரிவாக்கம் செய்யும் போது, ​​திங்கள்கிழமை இரவு இந்திய – சீன ராணுவங்களுக்கு இடையே நேருக்கு நேர் மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலும் உயிரிழப்புகளுடன் வன்முறை நடந்தது என்று ராணுவம் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த மோதலில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் மற்றும் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்று ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், அங்கே இரு தரப்பு இடையே நிலவும் பதற்றத்தைக் குறைக்க இருதரப்பு ராணுவ அதிகாரிகள் அந்த இடத்தில் சந்திக்கின்றனர் என்றும் ராணுவம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த மோதலில் வீர மரணமடைந்த இராணுவ வீரர்களில் ஒருவர், தமிழகத்தை சேர்த்தவர் என்பது தெரிய வந்துள்ளது. சீன எல்லையில் வீர மரணம் அடைந்தவர் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் என்றும், திருவாடனை அருகே கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி என்பதும் தெரிய வந்துள்ளது.

தற்போது எல்லையில் பதற்றம் நிலவுவதால், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படைகள் தலைமை தளபதி பிபின் ராவத்துடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

Similar News