அம்மன் கோவிலை கிறிஸ்தவ தேவாலயமாக மாற்ற முயற்சி - சிலுவை வரைந்து அட்டூழியம்!

அம்மன் கோவிலை கிறிஸ்தவ தேவாலயமாக மாற்ற முயற்சி - சிலுவை வரைந்து அட்டூழியம்!

Update: 2021-01-18 18:10 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் இந்து கோவில் ஒன்றில் சிலுவையை வரைந்து வைத்து மத பிரச்சினையைத் தூண்டிய சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகாவில் ஆந்திர மாநில எல்லையை ஒட்டி உள்ள எல்லப்பள்ளி கிராமத்தில் பல ஆண்டுகளாக 250க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் அம்மன் கோயில் கட்டி வழிபட்டு வருகின்றனர். இந்தக் கோவிலின் வெளிப்புற சுவர்களிலும் அம்மனுக்கு முன் தரையிலும் சிலுவையை வரையப்பட்டு இருந்ததை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்த அவர்கள், புகாரில் பல ஆண்டுகளாக இந்த கோவிலில் வழிபட்டு வரும் நிலையில் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவர் ஏற்கனவே இந்த கோவிலில் உள்ள சிலைகளையும் உண்டியலையும் உடைத்து அராஜகத்தில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இதுகுறித்து இரண்டு முறை புகார் அளித்து அவர் கைது செய்யப்பட்ட போதும் மீண்டும் 14.1.2021, பொங்கல் திருநாளன்று இரவு மின் விளக்குகளை அணைத்துவிட்டு கோவிலைச் சுற்றிலும் சிலுவையை வரைந்து வைத்து கிறிஸ்தவ ஆலயமாக மாற்ற முயற்சி செய்ததாக புகார் அளித்துள்ளனர்.

இந்த செயலை தட்டிக்கேட்ட பொதுமக்களிடம் "உங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. என் பின்னால் 5 பேர் இருக்கின்றனர். அவர்களின் தூண்டுதலின் பேரில்தான் நான் வரைந்து வைத்துள்ளேன். உங்களால் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது" என்று கூறி கெட்ட வார்த்தையால் திட்டியுள்ளார். கோவிலை ஒட்டி சாலையின் இருபுறமும் சிலுவையை வரைந்து வைத்துள்ளார். அவரது மதக்கலவரத்தை தூண்டும் விதமான செயல்பாடுகளை குறிப்பிட்டு இதற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று புகார் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

புகார் கடிதத்துடன் கோவிலில் சிலுவை வரைந்து வைத்த புகைப்படத்தையும் சாலையில் இரு புறங்களில் உள்ள மின் கம்பங்களிலும், பாலத்திலும் சிலுவை வரைந்து வைத்ததற்கான புகைப்பட ஆதரங்களை இணைத்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரை தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பாஸ்கரை கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் தொடர்ந்து கோவில்கள் தாக்கப்படுவதும் கடவுள் சிலைகள் உடைக்கப்படுவதும் வாடிக்கையாகி வரும் நிலையில் ஆந்திர எல்லையில் உள்ள ஒரு கிராமத்தில் இத்தகைய சம்பவம் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News