கோவில் கட்டும் விவகாரம்: இஸ்லாமிய கும்பலால் கொல்லப்பட்ட இந்துக் குடும்பம்!
கோயில் கட்டும் பிரச்சினையில், முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சாலை விபத்தில் இந்து குடும்பத்தைச் சேர்ந்த 5 சகோதரர்கள் பலி.
பங்களாதேஷில் பிப்ரவரி 8-ஆம் தேதி அன்று முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒரு சாலை விபத்தில் ஒரே இந்து குடும்பத்தில் இருந்து ஐந்து சகோதரர்கள், 3 மூன்று சகோதரிகள் திட்டமிடப்பட்ட சாலை விபத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். பங்களாதேஷின் சிட்டகாங் பிரிவில் உள்ள காக்ஸ் பஜார் மாவட்டத்தில் உள்ள சகாரியா உபாசிலாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த தாக்குதலுக்கான காரணத்தை விவரித்த அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மகள் முன்னி இதுபற்றி கூறுகையில், "தனது தந்தை தனது குடும்பத்துடன் அப்பகுதியில் துர்கா பூஜைக்கு ஏற்பாடு செய்ததாக கூறினார். மேலும் ஜனவரி மாதம், வெளிநாட்டில் வசிக்கும் அவரது சகோதரர் தீபக் சுஷில், ஹசினாபாரா பகுதியில் ஒரு சிறிய கோவில் கட்டுவதற்காக சுமார் 4,000 செங்கல் மற்றும் ஜல்லிகளை கொண்டு வந்துள்ளார். இது இஸ்லாமியர்களை கோபப்படுத்தியது. அவர்கள் எங்கள் மீது மிகவும் கோபமாக இருந்தார்கள்" என்று கூறினார்.
இந்த கிராமத்தில் 30-35 இந்து குடும்பங்கள் வசிக்கின்றன. கோவில் கட்டும் பணி தொடங்கிய பிறகு, முன்னியின் தந்தைக்கு மிரட்டல் வந்தது. விபத்தின் போது, குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் சிட்டகாங் பொது மருத்துவமனையில் உயிருடன் போராடி வருகிறார். உயிர் பிழைத்த முன்னி சுஷில் கூறுகையில், 'சாலை விபத்து' திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை. அவரது சகோதரர்கள் ஐந்து பேர் கொல்லப்பட்ட நிலையில், இலக்கு வைக்கப்பட்ட தாக்குதலில் மேலும் இரு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி காயமடைந்தனர். அவர்கள் கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் தங்கள் தந்தை சுரேஷ் சந்திர சுஷீலை இழந்தனர். சம்பவத்தன்று, சுரேஷின் இறுதிச் சடங்குகளின் ஒரு பகுதியாக, குடும்பத்தைச் சேர்ந்த 7 மகன்கள் மற்றும் 2 மகள்கள் அதிகாலையில் ஒரு கோவிலுக்குச் சென்று வழிபட்டனர்.
அதிகாலை 5:00 மணியளவில் கோவிலில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்த போது, வேகமாக வந்த வேன் அவர்கள் மீது மோதியது. பிறகு, வாகனம் மீண்டும் அவர்கள் மீது திரும்பியது. அதன்பின், காக்ஸ் பஜார் நோக்கி வாகனம் வேகமாக சென்றது. தாக்குதலில் ஏழு சகோதரர்கள் காயமடைந்தனர். எனவே இந்த சம்பவம் தற்செயலாக நடந்தது அல்ல இது திட்டமிட்ட நடைபெற்ற கொலை சம்பவம் என்று அந்த குடும்பத்தினர் கூறுகிறார்கள். கோவில் கட்டுவது தொடர்பான விவகாரத்தில் இஸ்லாமிய கும்பல்கள் இத்தகைய செயல்களை புரிந்ததாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.
Input & Image courtesy:Opindia