சிறுபான்மையினர் ஓட்டிற்காக தி.மு.க - வினரால் குறிவைக்கப்படும் பீலா ராஜேஷ் ?

சிறுபான்மையினர் ஓட்டிற்காக தி.மு.க - வினரால் குறிவைக்கப்படும் பீலா ராஜேஷ் ?

Update: 2020-04-10 06:25 GMT

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் IAS க்கு எதிராக தி.மு.க ஆதரவு ஊடகங்களும், தி.மு.க ஆதரவு ஊடகவியலாளர்களும் களமாடி வருகின்றனர்.

தமிழக மக்கள் அனைவரின் பாராட்டுகளையும், ஆதரவையும் பெற்று வருபவர் திருமதி. பீலா ராஜேஷ் அவர்கள்.

இந்த கொரோனா பாதிப்பு காலத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளராக சிறப்பாக செயலாற்றி வருகிறார். இவருக்கு பல்வேறு இடங்களில் இருந்து ஆதரவு குவிந்து வருகிறது. குறிப்பாக முன்னாள் மத்திய அமைச்சர் திரு. சிதம்பரம் அவர்களே இவரை பாராட்டி ட்வீட் செய்திருந்தார்.

ஆனால் தி.மு.க ஆதரவு மஞ்சள் பத்திரிக்கைகள் சில அவரின் சாதியை அடிப்படையாக கொண்டு அவரை ஒரு முன்னாள் அமைச்சரின் உறவினர் என்றும், அவரின் செயலுக்கு உள்நோக்கம் கற்பிக்கும் விதமாகவும் செய்தி வெளியிட்டது.

அது போல் பத்திரிகையாளர் சந்திப்புகளில் "டெல்லி மாநாட்டிற்கு" சென்று வந்தவர்கள் என்று சொல்வதற்கே அவரின் செயலுக்கு மத ரீதியான சாயம் பூச முயலும் ரீதியில் செய்திகள் தி.மு.க ஊடகம் ஒன்று வெளியிட்டு வருகின்றது.

இந்த வரிசையில் இப்போது தி.மு.க ஆதரவு ஊடகவியலாளர்கள் களமிறக்க பட்டுள்ளனர். அதில் ஒருவரான சவுக்கு சங்கர் என்பவர் பீலா ராஜேஷ் அவர்களின் ஆடைகளை பற்றி விமர்சித்து டீவீட்டரில் பதிவிட்டிருந்தார். இது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

அதனை அப்படியே ரீடிவீட் செய்த மற்றொரு பெண் பத்திரிகையாளர் மிக கடுமையான வார்த்தைகளில் பீலா ராஜேஷ் அவர்களை சாட்டியுள்ளார்.

மொத்தத்தில் இவர்கள் அனைவரும் ஒரு குழுவாக ஒன்று கூடி இந்த இக்கட்டான சூழலில் கூட தி.மு.கவிற்கு அரசியல் லாபம் தேடித்தரும் வேலைகளை செய்வதை கண்டு மக்கள் பலர் முகம் சுழிக்கின்றனர்.

ஒரு பெண்ணாக இருந்து இந்திய ஆட்சிப்பணியில் வென்று இத்துணை கால அனுபத்துடன் இந்த நெருக்கடியான சூழலை திறன்பட கையாளும் பீலா ராஜேஷ் அவர்களை பாராட்ட கூட வேண்டாம், விமர்சனம் என்ற பெயரில் இப்படி அசிங்கமாக நடந்து கொள்ள வேண்டாமே என்று சமூக வலைத்தளவாசிகள் புலம்பிக்கொள்கின்றனர்.

அதே நேரத்தில் பெண்களுக்காக போராடும் பல பெண்ணிய முற்போக்கு வாதிகள் எங்கே சென்றனர் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஓரு பெண் என்றும் பாராமல், அவரின் சாதியை கண்டுபிடித்து அதை செய்திகளாக்குவதும், அவரின் செயலுக்கு மத ரீதியிலான சாயம் பூசுவதும், பெண்ணின் ஆடை சுதந்திரத்தின் அடிப்படைகளை கேள்விக்குறியாக்குவதும் என, பெண்ணுரிமை, சமூக நீதியை முன்நிறுத்தும் தி.மு.க அரசியலுக்காக அது அனைத்தையுமே காற்றில் பறக்க விடும் சந்தர்ப்பவாத கட்சி என்பது மீண்டும் ஒருமுறை நிறுபணமாகிறது.

Similar News