விநாயகர் வழிபாட்டில் அருகம்புல் இடம்பெறுவது ஏன்? அதன் மருத்துவ சிறப்பு என்ன?

விநாயகர் வழிபாட்டில் அருகம்புல் இடம்பெறுவது ஏன்? அதன் மருத்துவ சிறப்பு என்ன?

Update: 2020-07-03 02:32 GMT

அருகம்புல்லுக்கு மேற்கத்திய நாடுகளில் பல பெயர்கள் உண்டு. அருகம்புல்லின் தனித்தன்மை என்பது அதன் மருத்துவ குணமும், ஆன்மீக முக்கியத்துவமும் ஒரு சேர அமைந்திருப்பதே. இதனுடைய மருத்துவ குணங்கள் யாதெனில், அருகம்புல்லில் அதிக அளவிலான கேல்சியம், பாஸ்பரஸ், போட்டாஸியம், சோடியம் மாங்கனீஸ் போன்ற பல ஊட்டசத்து நிறைந்த ஒரு தாவரம். மேலும் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை இருக்கும் எனில் நாள்பட்ட பிரச்சனையும் அருகம்புல் சாறினில் சிறிதளவு தேன் கலந்து குடிக்க தீரும் என்கின்றனர் ஆயுர்வேத நிபுணர்கள்.

மேலும் ஜீரண கோளாறின் போது அருகம்புல் சாற்றினை 3 – 4 தே. கரண்டியினை ஒரு தம்ளர் தண்ணீரினுள் கலந்து வெறும் வயிற்றில் குடிக்க வயிற்றை சார்ந்த உபாதைகள் அனைத்தும் தீரும்.மேலும் அருகம்புல் சாற்றினை வேம்பு சாற்றுடன் கலந்து குடிக்க சர்க்கரை அளவினில் சமநிலையில்லை எனில் அதனை சீர் செய்ய உதவும்.

உடலுக்கு உடனடியாக எதிர்ப்பு சக்தியினை கூட்ட வேண்டுமெனில் அருகம்புல் சாற்றினை குடித்தால் உடனடியாக எதிர்ப்பு சக்தி கூடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் பெண்களுக்கு ஏற்படும் சிறுநீரு தொற்று, மேலும் இதனை தயிருடன் இணைத்து சாப்பிடும் போது மூலம், மற்றும் கர்ப்பப்பை நீர்கட்டிகள் போன்றவற்றுக்கு தீர்வாக அமையும்.

உடலில் உள்ள நச்சுத்தன்மையை போக்க அருகம்புல் சாறு மிகச்சிறந்த நிவாரணியாகவும் உள்ளது. இந்த தாவரத்தின் தனித்துவம் என்பது, நீர் இல்லாத சூழலில், மழைபொய்த்தாலும் காய்ந்து இருக்குமே தவிர அழிந்து போகத தன்மையுடையது. எப்போது அதன் மீது நீர் விழுகிறதோ மீண்டும் துளிர்த்தெழும். எனவே அருகம்புல் என்பது மனிதனுக்கு அடிப்படையில் நம்பிக்கையை விதைக்கிற ஒரு புல்லாகவே பாவிக்கப்படுகிறது. நேர்மறை ஆற்றல் பொருந்தியதாகவும் கருதப்படுகிறது.

மேலும், விநாயக பெருமான் ஜ்வாலாசுரன் என்ற அரக்கனை விழுங்கிய போது அவரால் அந்த வெப்பத்தை பொருத்து கொள்ள இயலவில்லை. அந்த வெப்பத்தை அடக்க பல புனித நீரினை அவருக்கு அபிஷேகம் செய்தும் அந்த வெப்பம் அடங்கவில்லை. தேவர்கள் முயன்றும் விநாயகரின் வெப்பத்தை தணிக்க இயலாத சூழலில், சப்த ரிஷிகள் அருகம்புல்லினை விநாயகர் தலையினில் வைக்க அவரின் வெப்பம் தணிந்த்தாம்.

இந்த காரணத்தினாலே விநாயக பெருமான், தனக்கான பூஜையில் நிச்சயம் அருகம்புல் இடம் பெற வேண்டும் என அருளுரைத்தாராம்.  

Similar News