ஹரியானாவில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.!

ஹரியானாவில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.!

Update: 2019-10-25 12:07 GMT

ஹரியானா சட்டப்பேரவை ஆட்சியமைப்பதற்கு 46 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக 40 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 31 இடங்களில் வெற்றிபெற்றுள்ளன.


தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோர இருக்கும், மனோகர்லால் கட்டார், டெல்லி சென்று பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார். 10 இடங்களில் வென்றுள்ள ஜனநாய ஜனதா கட்சி கிங் மேக்கராக உருவெடுத்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அக்கட்சியின் தலைவர் துஷ்யந்த் சிங் சவுதாலா, நேற்றிரவு டெல்லியில் வைத்து அமித்ஷாவை சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்நிலையில், ஜனநாயக ஜனதா கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் டெல்லியில் துஷ்யந்த் சிங் சவுதாலா தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துஷ்யந்த் சவுதாலா, ஹரியானாவாசிகளுக்கு வேலைவாய்ப்பில் 75 சதவீத இடஒதுக்கீடு, முதியவர் ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட குறைந்தபட்ச செயல்திட்டத்தை ஏற்கும் எந்த கட்சிக்கும் ஆதரவளிக்க தயார் என அவர் தெரிவித்தார்.


இதனிடையே, ஏற்கெனவே, சுயேச்சைகள் 7 பேரும் வரிசையாக பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதில் 4 பேர் பாஜகவில் சீட் கிடைக்காத காரணத்தினால், அக்கட்சியிலிருந்து விலகி சுயேச்சையாக போட்டியிட்டவர்கள். தங்களுடைய கட்சியும் பாஜகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாகவும் ஹரியானா லோகித் கட்சியின் ஒற்றை எம்எல்ஏ கோபால் கண்டா தெரிவித்துள்ளார்.


எனவே ஜனநாயக ஜனதா கட்சி அல்லது சுயேச்சைகள் ஆதரவுடன் ஹரியானாவில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. அமைச்சரவை குறித்து தீபாவளிக்குப் பிறகு முடிவுசெய்யப்படும் என்று கூறப்படுகிறது.


https://www.ndtv.com/india-news/election-results-2019-haryana-action-moves-to-delhi-as-bjp-pursues-independents-10-points-2122477




Similar News