பா.ஜ.க-வுடன் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிக்கு தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தயாராக இருப்பதாக தகவல்

பா.ஜ.க-வுடன் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிக்கு தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தயாராக இருப்பதாக தகவல்

Update: 2018-08-05 17:51 GMT
File Picture from Deccan Chronicle
கடந்த சனிக்கிழமை அன்று புது டில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (டி.ஆர்.எஸ்) கட்சியின் தலைவருமான திரு.சந்திரசேகர ராவ் சந்தித்து ஒரு மணி நேரத்திற்கு பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது, பா.ஜ.க உடனான 2019 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைக்க திரு. சந்திரசேகர ராவ் ஒப்புக்கொண்டுள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.


தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்காத தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, சமீபத்தில் தெலுங்கு தேசிய கட்சி அழைப்பு விடுத்த நம்பிக்கை இல்லா தீர்மாணத்திற்கு ஆதரவு அளிக்கவில்லை. நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் போது, பிரதமர் மோடி அவர்கள் தெலுங்கானா வளர்ச்சியை பாராட்டி பேசினார். இதனைத் தொடர்ந்து இரு கட்சிகளும் நெருக்கமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.



இரு கட்சிகளுக்கும் இடையே தேர்தலுக்கு முந்தைய கூட்டணி சாத்தியிமில்லாத நிலையில், பா.ஜ.க-விற்கு பெரும்பான்மை எண்ணிக்கை குறைந்தால், அந்த தருணத்தில் பா.ஜ.க-விற்கு டி.ஆர்.எஸ் ஆதரவு அள்ளிக்கக்கூடும் என்று அந்த செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.



தெலுங்கானா முதல்வர் திரு.கே.சி.ஆர். அவர்கள் 50 நாட்களுக்குள் இரண்டாவது முறையாக பிரதமரை சந்தித்துள்ளது, இரண்டு கட்சிகளுக்கும் இடையே நெருக்கமான உறவு இருப்பதையே காட்டுகிறது. பா.ஜ.க போதுமான எண்ணிக்கைகளைப் பூர்த்தி செய்யாவிட்டால், சில பிராந்தியக் கட்சிகளை தேசிய ஜனநாயகக் கட்சியை நோக்கி, டி. ஆர். எஸ் இழுக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

Similar News