பா.ஜ.க அதிரடி ஆட்டம் - 2 எம்.எல்.ஏக்கள் 50 கவுன்சிலர் பாஜகவில் இணைந்தனர் மேற்கு வங்கத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் !

பா.ஜ.க அதிரடி ஆட்டம் - 2 எம்.எல்.ஏக்கள் 50 கவுன்சிலர் பாஜகவில் இணைந்தனர் மேற்கு வங்கத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் !

Update: 2019-05-28 12:06 GMT

மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் இருந்த இரண்டு எம்எல்ஏக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ ஒருவர் இன்று(மே 28) டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க,வில் இணைந்தனர்.


திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் சுப்ரன்ஷூ ராய், துஷார்காந்தி பட்டாச்சார்யா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ தேவேந்திர ராய் ஆகியோரும், திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் 50 கவுன்சிலர்களும் பா.ஜ.,வில் இணைந்தனர்.


லோக்சபா தேர்தலுக்கு முன்னர் திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்த முகுல்ராயின் மகன்தான் சுப்ரன்ஷூ ராய். இவர் சில நாட்களுக்கு முன்னர் தான் திரிணமுல் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பா.ஜ., பொது செயலர் கைலாஷ் விஜயவர்கியா கூறியதாவது: 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்தது போல், திரிணமுல் , கம்யூ., காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.,வில் இணைவது 7 கட்டங்களாக நடக்கும். இன்று நடந்தது முதல் கட்டம்தான் என்றார்.


Similar News