#Breaking : காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் மூவர் சுட்டுக்கொலை.!

#Breaking : காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் மூவர் சுட்டுக்கொலை.!

Update: 2020-06-17 09:58 GMT

ஜம்மு-காஷ்மீரின் சோபி யான் மாவட்டத்தில் நேற்று செவ்வாயன்று காலை இந்தியப் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் மூவர் கொல்லப்பட்டனர். இந்தியா-பாகிஸ்தான் எல்லை யில் கடந்த சில நாட்களாகவே பதற்றம் அதிகரித்து வரும் நிலை யில், காஷ்மீரில் பாகிஸ்தான் பயங் கரவாதிகள் அடிக்கடி அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் காஷ்மீரில் இருக்கும் சோபியான் பகுதியில் உள்ள துர்கவங்கம் கிராமத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக உளவுத் துறை யினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த ராணுவப் படையினர், தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

அதன்பின்னர், பயங்கரவாதிகள் மறைந்திருந்த பகுதி சுற்றி வளைக் கப்பட்டபோது பயங்கரவாதிகளைச் சரணடையும்படி பாதுகாப்புப் படை யினர் கோரினர். ஆனால், அவர் களது கோரிக்கைகளை ஏற்காத பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படை யினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று ராணுவ வட்டா ரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. கடந்த இரண்டு வாரத்தில் பாதுகாப்புப் படையினர் 16 பயங்கர வாதிகளைக் கொன்றுள்ளனர். சோபியான் பகுதியில் இன்னும் ராணுவத்தின் தேடுதல் வேட்டை தீவிரமாக தொடர்ந்து வருகிறது

Similar News