ஆப்கன் பத்திரிக்கையாளர்களை தலிபான்கள் துன்புறுத்துகிறார்களா? அமெரிக்கா கண்டனம் !
ஆப்கானில் உள்ள பத்திரிக்கையாளர்களை தலிபான்கள் துன்புறுத்துகிறார்கள் என அமெரிக்கா தற்போது கண்டனம் தெரிவித்துள்ளது.
தற்போது உள்ள ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் தங்களுடைய ஆதிக்கத்தை முழுமையாக நிலைநாட்ட அவர்கள் பல்வேறு அதிகாரத்தை தங்களுடைய வசமாக்கி வருகிறார்கள். அந்த வகையில் மிகவும் முக்கியமான மீடியா வசதியை அவர்கள் தங்கள் வசம் படுத்தியுள்ளார்கள். குறிப்பாக அங்கு வேலை பார்க்கும் பத்திரிக்கையாளர்களுக்கு வேலை இல்லை என்று கூறி விட்டு, அதற்கு பதிலாக தலிபான்களை செய்தியாளர் ஆக நியமித்து உள்ளார்கள். இந்த நிலையில் தற்போது ஆப்கானிஸ்தானில் உள்ள பத்திரிகையாளர்களை தலிபான்கள் எல்லா நிலையிலும் துன்புறுத்துகின்றனர் என்று அமெரிக்கா சார்பில் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இவ்வளவு ஆண்டு காலமாக நடந்த உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த நிலையில், ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். அங்கு ஜனநாயக ஆட்சி கிடையாது. குறிப்பாக தலிபான்கள் ஷரியத் சட்டத்தின்படிதான் ஆட்சி நடக்கும் என்று பயங்கரவாத அமைப்பின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். இந்நிலையில், தலிபான்கள் தங்களை பணிக்குச் செல்ல அனுமதிக்கவில்லை என்று காபூலில் உள்ள பெண் பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக, அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நெட் பிரஸ் கூறுகையில், "ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து பத்திரிகையாளர்களை தலிபான்கள் எல்லா நிலையிலும் துன்புறுத்துகின்றனர். அமெரிக்கப் பத்திரிகையாளர்களையும் அவர்கள் துன்புறுத்துகிறார்கள். இவர்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பிறகு இதன் எண்ணிக்கை தற்போது அதிகரித்து உள்ளது.எனவே இது கண்டனத்துக்குரியது ஒரு செயலாக இருக்கும்" என்று அவர் கூறினார்.
Image courtesy: CNBC news