இந்தோனேஷியா: கொரோனா பாதிப்பு காரணமாக, சிகிச்சை மையமாக மாறிய சொகுசு கப்பல் !

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சொகுசு கப்பல் ஒன்று தற்காலிக சிகிச்சை மையமாக மாறியுள்ளது.

Update: 2021-08-14 14:17 GMT

இந்தோனேசியா நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக அங்கு மருத்துவர்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பொழுது, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் காரணத்தினால், இந்தோனேஷியா அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தற்போது எடுத்து வருகிறது. 


இந்நிலையில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சொகுசு கப்பல் ஒன்று தற்காலிக சிகிச்சை மையமாக மாறியுள்ளது. இந்த கப்பலில் 800 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 60 சுகாதார பணியாளர்களும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த மையத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளை பத்து நாட்கள் தனிமைப் படுத்தப்படுகின்றனர். இந்த கப்பல் இந்தோனேசியாவின் துறைமுக நகரமான மகாசார் பகுதியில் நங்கூரம் இடப்பட்டுள்ளது.


தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகள் தற்போது இந்த கப்பலி சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஜூலை 30 துவங்கி ஆகஸ்ட் 12 வரை 4,42,949 பேர் புதிதாக அங்கு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடுகளுக்கு இந்த நோய் தொற்று பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, தடுப்பூசிகளின் எண்ணிக்கை பற்றாக்குறையாக உள்ள நாடுகளில் இதைவிட மோசமான சூழ்நிலைகளை ஏற்பட்டுள்ளது.  

Input: https://www.scmp.com/video/coronavirus/3145015/afloat-and-alone-indonesias-covid-19-isolation-facility-sea

Image courtesy:wikipedia 


Tags:    

Similar News