விசா மோசடி செய்து மதப்பிரச்சாரம் - கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் தாய்லாந்தைச் சேர்ந்த 6 பேர் மீது ஈரோட்டில் வழக்கு பதிவு!

விசா மோசடி செய்து மதப்பிரச்சாரம் - கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் தாய்லாந்தைச் சேர்ந்த 6 பேர் மீது ஈரோட்டில் வழக்கு பதிவு!

Update: 2020-04-07 05:19 GMT

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் தாய்லாந்தைச் சேர்ந்த 6 பேர் மீது ஈரோட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதல் பாரபட்சமில்லாமல் உலகம் முழுவதும் உள்ளது. ஐரோப்பாவில் மட்டும் கொரோனா தாக்குதலால் 50 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 74 ஆயிரத்து 654 பேரை கொரோனா பலி கொண்டுள்ளது.

தமிழகத்தில் 622 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் தாய்லாந்தைச் சேர்ந்த 6 பேர் மீது ஈரோட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா விசாவில் வந்து மதப் பிரச்சாரம் செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 14 ஆம் தேதி அன்று சென்னையிலிருந்து ஈரோடு மாவட்டத்திற்குத் தனியார் வாகனத்தில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த குழுவினர் வந்துள்ளனர். மார்ச் 15 ஆம் தேதி, குழுவைச் சேர்ந்த இருவர் உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் தாய்லாந்திற்கு செல்ல கோவை விமான நிலையம் வந்துள்ளனர்.

அப்போது, இருவரையும் பரிசோதனை செய்த சுகாதாரத்துறை அதிகாரிகள் டான் ரசாக் (வயது 49) என்பவருக்கு சலி மற்றும் இருமல் இருப்பதைக் கண்டறிந்து கொரோனா பரிசோதனைக்காக இருவரையும் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிறுநீரக பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த டான் ரசாக் 17 ஆம் தேதி காலை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். அதன் பிறகே உடன் வநதவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 


Similar News