சீனாவில் கனமழையால் 16 ஆயிரம் பேர் பாதிப்படைந்து உள்ளனர் ! மக்களின் வாழ்க்கை பெரும் பாதிப்பு !
சீனாவின் லியோனிங் மாகாணத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் 16,000 பேர் பாதிப்படைந்து உள்ளனர்; 4,500 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்' என, பேரிடர் மீட்புத்துறை தெரிவித்து உள்ளது.
சீனாவின் லியோனிங் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் இருக்கும் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளது.
'கனமழை மற்றும் புயல் காற்றால் சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 16,583 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் குடியிருக்கும் 4,500 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர்' என, லியோனிங் மாகாண பேரிடர் மீட்புத்துறை தெரிவித்து உள்ளது.