ஆபத்து விலகியது.. இந்திய கடலில் விழுந்த சீன ராக்கெட் பாகம்.!

விண்வெளியில் ஆதிக்கம் செலுத்தும் விதமாக பல்வேறு முயற்சிகளை சீனா மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த மார்ச் 29ம் தேதி லாங் மார்ச் 5பி ராக்கெட் மூலம் கட்டுமான விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது.

Update: 2021-05-09 05:35 GMT

விண்வெளியில் ஆதிக்கம் செலுத்தும் விதமாக பல்வேறு முயற்சிகளை சீனா மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த மார்ச் 29ம் தேதி லாங் மார்ச் 5பி ராக்கெட் மூலம் கட்டுமான விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது.

அப்போது விண்கலத்தை பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் நிலைநிறுத்திய ராக்கெட், மீண்டும் பூமியை நோக்கி திரும்பியது. சீன விண்வெளி மைத்தின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனையடுத்து எந்த நேரமும் ராக்கெட் பாகம் பூமியின் மீது விழும் ஆபத்து உள்ளது என சீன விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்தது.




 


இதனால் உலக நாடுகள் மிகவும் அதிர்ச்சியடைந்தது. ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றால் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வரும் சூழ்நிலையில், ராக்கெட் பூமி மீது விழுவது சீனாவின் மீது உலக நாடுகள் கடும் கோபத்தில் இருந்தது.

இந்நிலையில், கட்டுப்பாட்டை இழந்த சீன ராக்கெட் வளிமண்டலத்திற்குள் நுழைந்து பூமியை நோக்கி வேகமாக வரத் தொடங்கியது. 18 டன் எடை கொண்ட ராக்கெட்டின் பெரும்பாலான பாகங்கள் எரிந்து சாம்பலாகிவிடும் என்றும், எஞ்சிய பாகங்கள் அனைத்தும் கடலில் விழும் என்றும் சீனா தெரிவித்திருந்தது.

அதன்படி ராக்கெட்டின் சில பாகங்கள் இன்று மாலத்தீவு அருகே இந்திய பெருங்கடலில் விழுந்ததாக சீனா தெரிவித்துள்ளது. தற்போதுதான் உலக நாடுகள் நிம்மதி அடைந்துள்ளது. சீனா செய்யும் ஒவ்வொரு செயலும் உலக நாடுகளை பெரும் அச்சுறுத்தலை அடைய செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News