அதிமுக- பாஜக கூட்டணியால் தமிழக மக்களுக்கு இலாபம்தான் : தம்பிதுரை அசத்தல் பேச்சு .!

அதிமுக- பாஜக கூட்டணியால் தமிழக மக்களுக்கு இலாபம்தான் : தம்பிதுரை அசத்தல் பேச்சு .!

Update: 2019-02-20 12:47 GMT


அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியால் தமிழக மக்களுக்கு லாபம் தான் என்று கரூரில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை பேசிய பேச்சு அதிமுக – பாஜக கூட்டணியினரை வியப்படைய வைத்துள்ளதாக கூறப்படுகிறது.


கரூர் பசுபதிபாளையத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-


தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சமீப காலமாக ஒருமையில் பேசுவதை கவனித்து இருப்பீர்கள். தங்களால் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது, வெற்றி பெற முடியாது என்ற மன அழுத்தத்தால் அநாகரீகமான முறையில் பேசிக்கொண்டு இருக்கிறார்.


பாராளுமன்ற தேர்தல் உள்ளாட்சி, சட்டமன்ற தேர்தல் என எந்த தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெறப்போவது இல்லை. இந்த விரக்தியின் விளிம்பில் சவால்கள் விட்டுக்கொண்டு இருக்கிறார்.


பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க. தலைவர்கள் உரிய முடிவு எடுப்பார்கள் என்று நான் தெரிவித்து இருந்தேன். அந்த அடிப்படையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.


தி.மு.க., காங்கிரஸ் ஆட்சியில்தான் ஒன்றரை லட்சம் இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டனர். தமிழர்களுக்கு துரோகம் செய்த கட்சி மீண்டும் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அ.தி.மு.க. கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.


அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியால் தமிழக மக்களுக்கு வருங்காலத்தில் அதிக இலாபம் கிடைக்கும்  இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்ந்து பாஜகவுடன் அதிமுக கூட்டணி கூடாது என பேசி வந்த தம்பிதுரை கூட்டணி ஏற்பட்டபிறகு திடீரென வழிக்கு வந்து இவ்வாறு பேசியதை அடுத்து கூட்டணியினர் வியப்பும், மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும்  அடைந்துள்ளனர்.


Similar News