கனடாவின் வரிசையில் இந்தியா - நாட்டுக்காக இன்னுயிரைத் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்காக தேசிய போர் நினைவகம்

கனடாவின் வரிசையில் இந்தியா - நாட்டுக்காக இன்னுயிரைத் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்காக தேசிய போர் நினைவகம்

Update: 2019-02-25 18:06 GMT

தில்லியில் இந்தியா கேட் பகுதியில் தேசிய போர் நினைவகத்தை பிரதமர் மோடி இன்று (திங்கள்கிழமை) நாட்டுக்கு அர்ப்பணத்தார்.படியேறிச் செல்வதற்கான இடைவெளியுடன் கூடிய ஒரு பெரிய வட்ட வடிவிலான அடித்தளமும், அதன் மையப் பகுதியில் சதுர வடிவில் மேடையும் அமைந்துள்ளது. அதன் நடுவில் அணையா விளக்குடன் கூடிய ஸ்தூபி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவகம் 40 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படை அதிகாரி லெஃப்டினன்ட் ஜெனரல் பி.எஸ்.ராஜேஸ்வர் கூறுகையில், "கடந்த 1971ஆம் ஆண்டில் இந்தியா-பாகிஸ்தான் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக இந்தியா கேட்டையொட்டி அமைக்கப்பட்டுள்ள அமர் ஜவான் ஜோதி அங்கேயே இருக்கும். தேசியப் போர் நினைவகம் அமைக்க ₹176 கோடி செலவானது. சர்வதேச அளவில் போட்டி நடத்தி இந்த வடிவம் இறுதியாகத் தேர்வு செய்யப்பட்டது. இன்று (திங்கள்கிழமை) நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், முப்படைத் தலைமை தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தியபோது, "தேசிய போர் நினைவகத்துக்கு வரும் மக்கள் புனிதமான இடத்துக்கு வருவதைப் போல் உணர்வார்கள். சுதந்திரத்துக்கு பிறகு நாட்டுக்காக இன்னுயிரைத் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் நினைவாக இந்த போர் நினைவகம் இருக்கும்' என்று கூறியிருந்தார். கனடாவில் தேசிய போர் நினைவகம் அமைக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் நாட்டுக்காக உயிர் நீத்த வீரர்கள் நினைவு கூறப்பட்டு வரும் நிலையில், இந்தியாவிலும் இதே போல முயற்சி மேற்கொள்ளப்படுவது மென்மேலும் நாட்டுப்பற்றை வளர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது.


Similar News