என்ன முதல்வரா ஆக்குங்க.. ஒரே வாரத்தில் என்ன நடக்குது பாருங்க – பிரதமருக்கு சவால் விட்ட மீரா மிதுன்.!

என்ன முதல்வரா ஆக்குங்க.. ஒரே வாரத்தில் என்ன நடக்குது பாருங்க – பிரதமருக்கு சவால் விட்ட மீரா மிதுன்.!

Update: 2020-06-30 11:04 GMT

தமிழ் சினிமாவில் துணை நடிகையாக ஒரு சில படங்களில் நடித்திருப்பவர் மீரா மிதுன். தன்னைத் தானே சூப்பர் மாடல் என சொல்லிக் கொள்ளும் மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருந்து வரும் இவர் அடிக்கடி புகைப்படங்கள் வீடியோக்களை பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.

தன்னை வைத்து ஏதாவது மீன் வெளியானால் கூட அந்த மீனை பதிவிட்டு ஆக்சன் எடுக்குமாறு டைரக்டாக பிரதமர் நரேந்திர மோடிக்கு ட்வீட் போடுகிறார். இந்த நிலையில் தற்போது டுவிட்டர் பக்கத்தில் உடனடியாக தமிழ் நாட்டில் நடந்து வரும் ஆட்சியை களையுங்கள். என்னை முதல்வராக்குங்க.

ஒரே வாரத்தில் அனைத்தையும் என் கட்டுக்குள் கொண்டு வருவேன். மக்களை காப்பேன். ஒரு மாதத்தில் அனைத்து அக்யூஸ்ட்களும் ஜெயிலில் இருப்பார்கள். 3 மாதத்தில் ஊழல் இல்லாத மாநிலமாக மாற்றுவேன். 6 மாதத்தில் இந்தியாவின் பொருளாதாரத்தை பெருக்குவேன் என கூறியுள்ளார். மீரா மிதுன் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் கண்டமேனிக்கு கலாய்த்து எடுத்து வருகின்றனர்.



Similar News