இட ஒதுக்கீட்டு கொள்கை தொடர்பாக பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் பாஸ்வான் கருத்துக்களால் மகிழ்ச்சி : ஸ்டாலின்.!

இட ஒதுக்கீட்டு கொள்கை தொடர்பாக பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் பாஸ்வான் கருத்துக்களால் மகிழ்ச்சி : ஸ்டாலின்.!

Update: 2020-06-14 02:20 GMT

சமீபத்தில் உச்சநீதிமன்றம் வழக்கு ஒன்றில் இட ஒதுக்கீடு அடிப்படையில் சில சமூகங்கள் இட ஒதுக்கீடு கேட்பது அடிப்படை உரிமை அல்ல என கூறியது.  நீதிமன்றம் கூறிய குறிப்பிட்ட வழக்கை ஒட்டிய இந்த கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு அது அரசின் கருத்தாக சில ஊடகங்கள் மற்றும் எதிர்கட்சிகளால் விஷமப் பிரச்சாரம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் பிரதமர் நரேந்திர மோடியும், பாஜகவும் உறுதியாக உள்ளநிலையில், சமூக நீதியில் நாங்கள் கொண்டிருக்கும் உறுதிப்பாடு பிரிக்க முடியாதது என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்திருந்தார்.

அதேபோல மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பவானும் இட ஒதுக்கீட்டு கொள்கைக்காக ஒத்த கருத்துடைய கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் வேண்டும் என்றும், இட ஒதுக்கீடு என்பது அரசியல் சட்டம் நமக்கு வழங்கியுள்ள உரிமை என்றும் எனவே எந்த இடத்திலாவது இந்த உரிமைகளுக்கு தடங்கல் ஏற்பட்டால் அதை நாம் கலந்து பேசி சட்டத்தின் துணையுடன் தீர்த்துக் கொள்ளலாம் என்றும் கூறியிருந்தார்.

இது குறித்து மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜே.பி.நட்டாவின் அறிவிப்பு எனக்கு ஆச்சரியத்தையும் அதே சமயம் மகிழ்ச்சியையும் தருகிறது என்றார். அதற்காக தான் அவருக்கு நன்றி கடமை பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதேபோல ராம்விலாஸ் பஸ்வானின் கருத்தை தான்  மனமார வரவேற்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அதே சமயம் நடந்து முடிந்துள்ள முதுநிலை மருத்துவப் படிப்புக்கான சேர்க்கையை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும், முதுநிலை மருத்துவக் கல்விக்கான இட ஒதுக்கீட்டை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.  

https://www.hindustantimes.com/india-news/bjp-and-centre-committed-to-providing-reservation-nadda/story-5BFfOjWhNKdXWb7WdXJhxK.html

Similar News