தல அஜித்தின் 'தக் ஷா' குழுவுக்கு கர்நாடக துணை முதலமைச்சர் பாராட்டு.!

தல அஜித்தின் 'தக் ஷா' குழுவுக்கு கர்நாடக துணை முதலமைச்சர் பாராட்டு.!

Update: 2020-06-28 04:58 GMT

கொரோனா வைரஸ் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ள இடங்களில் ஆளில்லா விமானம்(ட்ரான்) மூலம் கிருமிநாசினி தெளிக்கும் தக் ஷா குழுவுக்கும் மற்றும் நடிகர் அஜித்துக்கும் கர்நாடக துணை முதலமைச்சர் அஸ்வத் நாராயண் அவருடைய பாராட்டை தெரிவித்துள்ளார்.

சென்னையில் கொரோனா வைரஸ் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மண்டலங்களில் ஆளில்லா விமானம்(ட்ரான்கள்) மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இதனை செய்து வரும் மருத்துவர் கார்த்திகேயன் ஆளில்லா விமானம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் சிறந்த ஆலோசனையை அளித்தவர் நடிகர் அஜித் என கூறியுள்ளார்.

அந்த ட்ரான்களை கொண்டு அரை மணி நேரத்தில் 16 லிட்டர் கிருமிநாசினி தெளிக்க முடியும் என அஜித் கொடுத்த அறிவுரை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்து இருந்தார்.

இந்த தகவலை அறிந்த கர்நாடகா துணை முதலமைச்சர் அஸ்வத் நாராயண் தக் ஷா குழுவுக்கும் அதன் ஆலோசகரான நடிகர் அஜித்துக்கும் அவருடைய பாராட்டை தெரிவித்துள்ளார்.


இதனை பற்றி அஸ்வத் நாராயண் ட்விட்டரில் கூறியது ; கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஆளில்லா விமானம்(ட்ரான்) மூலம் கிருமி நாசினி தெளித்து வரும் தக் ஷா குழுவுக்கும் அதன் ஆலோசகர் நடிகர் அஜித்துக்கு என்னுடைய பாராட்டுக்கள். இந்த போராட்டத்தில் தொழில்நுட்பம் முக்கியமானது என்பதை மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. என பதிவிட்டு இருந்தார்.  

Similar News