சீன விவகாரத்தில் ராகுல் காந்தியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த சொந்த கட்சியை சேர்ந்த மிலிந்த் தியோரா.!

சீன விவகாரத்தில் ராகுல் காந்தியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த சொந்த கட்சியை சேர்ந்த மிலிந்த் தியோரா.!

Update: 2020-06-29 12:29 GMT

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சீன அத்துமீறல் விஷயத்தில் அரசைக் குறை சொல்வது நாட்டில் பிரிவினை இருப்பதைக் காட்டிக் கொடுப்பது போலாகும் என்று கூறிய மிலிந்த் தியோரா ராகுல் காந்தியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்

கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் ஏற்பட்ட மோதல் குறித்து மோடி அரசை குற்றம்சாட்டியதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் ராகுல்காந்தியை சாடினார். இப்போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் இந்த விஷயத்தில் அரசியல் செய்வது சரியல்ல என்று கூறியுள்ளார். சீனா மற்றும் இந்தியாவுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் இருபது பேர் உயிரிழந்துள்ள நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசை பற்றி தவறான கருத்துக்களை கூறுவது சரியல்ல என்று முன்னாள் மத்திய அமைச்சர் மிலிந்த்  தியோரா தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களின்  உபயோகமின்றி எல்லைப்பகுதியில் இரு நாட்டு வீரர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் ஊகத்தின் அடிப்படையில் 40 சீன வீரர்கள் இறந்ததாக  கூறப்பட்டாலும், சீனா இறப்பை மட்டுமே உறுதிப்படுத்தியுள்ளது, இறந்தவர்களின் எண்ணிக்கையை வெளிப்படுத்தவில்லை.

அவர் அரசியல் காழ்ப்பணர்சியால் சீனாவின் அத்துமீறலுக்கு அரசை குறை கூறி கருத்துக்களை வெளியிடுவது துரதிஷ்டவசமானது. இந்த தருணத்தில் சீனாவிற்கு எதிராக கண்டனங்களை எழுப்பவேண்டும்.அனைவரும்  ஒன்றிணைந்து தீர்வு காண வேண்டும். ஆனால் நாம் நமது நாட்டின் பிளவுகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்று ட்வீட் செய்துள்ளார்.



இருந்தபோதிலும், இவர் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. அவரது பேச்சு அவரது சொந்தக் கட்சியான காங்கிரஸ் மற்றும் தலைவரை குறிப்பிடுவதாக உள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மற்ற தலைவர்கள் மத்திய அரசுக்கு துணை நிற்காமல் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் ஏற்பட்ட மோதலுக்கு மத்திய அரசை குற்றம் சாட்டுகின்றனர்.எதிரி நாடுகள் அச்சுறுத்தல் விடுக்கும் இந்நேரத்தில் மத்திய அரசுடன் இணைந்து செயலாற்றுவது ஒரு விதிமுறை ஆகும்.

ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக தனது கட்சியை தாக்கிப் பேசியுள்ளார் மிலிந்த் தியோரா.அவசரநிலையின் 45 ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட்ட கடந்த வியாழக்கிழமை, சோதனைக் காலங்களில் மக்கள் விடாமுயற்சியுடன்  போராடுவது நமக்கு அவசர நிலையை நினைவூட்டுகிறது. இது அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும். ஜனநாயக அமைப்புகள் சூழ்நிலைக்கேற்றவாறு மாற்றிக்கொண்டு சவால்களைக் கடந்து செல்கின்றன. ஜனநாயகத்திற்கு தியாகம்,அர்ப்பணிப்பு மற்றும் உண்மையான நோக்கம் ஆகியவையே தேவை என்று ட்விட் செய்துள்ளார்.



இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், எரிபொருள் விலை பிரச்சனைக்கு கருத்து தெரிவித்த ராகுல் காந்தியின் கருத்துக்கு வெளிப்படையாக மிலிந்த் தியோரா மறுப்பு தெரிவித்துள்ளார். கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வீழ்ச்சியின் நன்மையை நுகர்வோருக்கு அளிக்க வேண்டும் என்று ராகுல்காந்தி கூறியிருந்தார். ஆனால் தியோரா West Texas Intermediate கச்சா எண்ணெய் விலையில் தான் அதிக அளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது, ஆனால் இந்தியா Brent கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது.இது அந்த அளவுக்கு விலை வீழ்ச்சி அடைய வில்லை என்று கூறியுள்ளார். 

ரூபாயின் மதிப்பு குறைவானது கச்சா எண்ணெயின் விலை குறைவை ஈடுகட்டும் மற்றும் ஊரடங்கு காரணமாக வாகனங்கள் அதிக அளவு உபயோகப்படுத்தப்பட காரணத்தினால் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் அது நுகர்வோருக்கு எவ்வித பலனையும் தராது என்று கூறியுள்ளார்.

கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதிலிருந்து தவறான தகவல்களை கூறுவதும் அரசின் அறிக்கைகளை மாற்றிய கூறுவதும் என மோடி அரசை குறை கூறி வருகிறார் ராகுல் காந்தி.  ஜூன் 18-ஆம் தேதி ராகுல் காந்தி, ஏன்? இந்திய ராணுவம் ஆயுதங்கள் வைத்திருக்க வில்லை? என்று கேட்டார்.ஆனால் உண்மை என்னவென்றால்  இரு நாட்டு வீரர்களும் ஆயுதம் வைத்திருந்தனர்.காங்கிரஸ் அல்லது காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தபோது எல்லையில் ஆயுதம் உபயோகிக்கக் கூடாது என்ற ஒப்பந்தத்தின் காரணமாக இரு நாட்டு வீரர்களும் ஆயுதம் உபயோகிக்கவில்லை.

எல்லையை மோடி அரசு சீனாவிடம் ஒப்படைத்து விட்டதாக குற்றம் சாட்டி"Narendra Modi Is actually Surender Modi" என்று ட்வீட் செய்துள்ளார். இது ஒரு தவறான குற்றச்சாட்டாகும். இந்திய பகுதியில் சீன வீரர்கள் கூடாரம் அமைத்திருந்தனர்.இருந்த போதிலும் இந்திய வீரர்கள் வெளியேற்றப்பட்டார்கள். இதன் விளைவாக மோதல் வெடித்தது. பிரதமர் மோடி தற்போது சீன கட்டுப்பாட்டில் இந்திய பகுதிகள் எதுவும் இல்லை என்று கூறியிருந்தார். ஆனால் ராகுல்காந்தி இந்த விளக்கத்தை திரித்து இந்தியா தனது பகுதிகளை சீனாவிடம் ஒப்படைத்து விட்டது என்று கூறியுள்ளார்.

ஆனால் தற்போது காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் மத்திய அரசை குறை கூறுவதை விரும்பவில்லை. நேற்று சரத்பவார் ராகுல் காந்தியிடம் 45,000 சதுர கிலோ மீட்டர் பகுதியை சீனாவிடம் ஒப்படைத்தது நினைவிருக்கிறதா என்று கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் அவர் சீன வீரர்கள் இந்திய எல்லைக்குள் நுழையும் போது, இந்திய வீரர்கள் அவர்களை தடுத்துள்ளார்கள். இந்த விஷயத்தில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டது என்றும் பாதுகாப்பு அமைச்சர் தோல்வி அடைந்துவிட்டார் என்றும் கூறுவது சரியல்ல. நம் இந்திய வீரர்கள் நிலைமை அறிந்து திரும்ப சண்டையிட்டு உள்ளனர் என்று கூறியுள்ளார்.

Similar News