சொந்த ஊர்களிலிருந்து பணிபுரியும் மாநிலங்களுக்கு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள்.!

சொந்த ஊர்களிலிருந்து பணிபுரியும் மாநிலங்களுக்கு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள்.!

Update: 2020-06-28 08:16 GMT

புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களிலிருந்து மீண்டும் அவர்கள் முன்னர் பணிபுரிந்து வந்த மாநிலங்களுக்கு திரும்பி வருகின்றனர் என ரயில்வே அமைப்பின் தலைவர் விகே யாதவ் கூறியுள்ளார்

தொழிலாளர்கள்,உத்தரபிரதேசம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் இருந்து, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் அகமதாபாத் போன்ற மாநிலங்களுக்கு புலம்பெயர தொடங்கியுள்ளனர் என்று ரயில்வே அமைப்பின் தலைவர் விகே யாதவ் தெரிவித்துள்ளார்.

யாதவ் தெரிவித்த தகவலானது,ஷ்ராமிக்  எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் தங்களது சொந்த மாநிலங்களுக்கு  சென்ற மக்கள், இம்மாத தொடக்கத்திலிருந்து, இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் மூலம் பணிபுரியும் மாநிலங்களுக்கு மீண்டும் திரும்புகின்றனர் என்பதாகும்.

ரயில்கள் மூலம் தொழிலாளர்கள் மீண்டும் இடம்பெயர்வது கவலை அளிக்கிறது என்று பத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டியில்  யாதவ் கூறியுள்ளார். உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் இருந்தே ரயில்களுக்கான முன்பதிவு அதிகம் செய்யப்பட்டுள்ளது. 70 சதவீதத்திற்கும் அதிகமான இடம்பெயரும் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்கள் இந்த மாநிலங்களுக்கு இயக்கப்பட்டன. இவை இப்போது மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் அகமதாபாத் நோக்கி இயக்கப்படுகின்றன.

இதை வளர்ச்சியாக கருதும் யாதவ், பற்றாக்குறை மற்றும் கோவிட்-19 பரவுதல் காரணமாக அதிக அளவு பயணிகள் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் அவர், வரும் வாரம் அல்லது பத்து நாட்களில் ரயில்வே அமைச்சகம் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து முடிவு செய்யும் என்று கூறியுள்ளார்.

மார்ச் 22ல்,12,000 க்கும் அதிகமான பயணிகள் ரயில்களின் இயக்கத்தை நிறுத்திய ரயில்வே, தற்போது 230 சிறப்பு ரயில்களை மட்டும் இயக்குகிறது.இதில் 30 ராஜ்தானி ரயில்களும்,200 மெயில் எக்ஸ்பிரஸ் ரயில்களும் ஜூன் 1 முதல் இயக்கப்படுகின்றன.

Similar News