ஹாலிவுட் படக் காட்சிகளை சுட்டு தங்கள் விமானப் படை பயிற்சியாக ரீல் ஓட்டிய சீன ராணுவம்!

ஹாலிவுட் படக் காட்சிகளை சுட்டு தங்கள் விமானப் படை பயிற்சியாக ரீல் ஓட்டிய சீன ராணுவம்!

Update: 2020-06-26 12:55 GMT

சீன அரசின் ராணுவமான , மக்கள் விடுதலை இராணுவத்தின் (PLA) பழைய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில் சீன விமானப்படை, ஹாலிவுட் திரைப்படங்களின் காட்சிகளை சுட்டு தன் வீடியோக்களில் சேர்த்து ரீல் ஓட்டியது அம்பலமாகியுள்ளது.

சீன அரசாங்கத்தின் ஊதுகுழலான 'சீன மத்திய தொலைக்காட்சி', மாலை செய்தி ஒளிபரப்பின் போது, ஜனவரி 23, 2011 அன்று நடத்தப்பட்ட ஒரு விமானப்படை பயிற்சி என்று , சீன போர் விமானத்தின் ஏவுகணையால் தாக்கப்பட்ட ஒரு "எதிரி" ஜெட் மாபெரும் தீப்பிழம்பாகி வெடிக்கும் காட்சியைக் காட்டியது.

இந்த வீடியோ பலத்த உற்சாகத்துடன் ஆன்லைனில் வெளியிடப்பட்டு விரைவில் வைரலாகியது. சீன விமானப்படை ஜே -10 விமானத்தை காட்டி, இது பயிற்சியின் போது மற்றொரு விமானத்தில் இருந்த ஏவுகணையை சுட்டதாகக் காட்டினர்.

இருப்பினும், சமூக ஊடகத்தில் பலரும், திரைப்பட ஆர்வலர்களும் இந்த காட்சிகள் உண்மையில் டாம் க்ரூஸ் நடித்த ஹாலிவுட் திரைப்படமான "டாப் கன்" (Top Gun) திரைப்படத்திலிருந்து நேரடியாக திருடப்பட்டது என்பதையும் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் காட்டப்பட்டது F- 5 ரக அமெரிக்க விமானம் என்றும் விரைவில் சுட்டிக்காட்டினர் .தங்கள் பிரச்சாரங்களுக்காக ஹாலிவுட் படங்களில் இருந்து 'சுடுவது' அவசியமா என கலாய்த்து வருகின்றனர்.

இதை சரி பார்க்க வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் (Wall Street Journal) சீன தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் டாப் கன் திரைப்படத்தின் காட்சிகளை பிரேமுக்கு பிரேம் ஒப்பிட்டுப் பார்த்து, இது இரண்டு வீடியோக்களும் ஒரே மாதிரியானவை என்ற முடிவுக்கு வந்தது. 

Full View

கையும் வீடியோவுமாக மாட்டிய பிறகு,சீன இராணுவம் கடுமையான சங்கடத்தை எதிர்கொண்டது. வேக வேகமாக வீடியோவை டெலீட் செய்தனர். ஆனால் பல சீன வலைத்தளங்களும் செய்தி தளங்களும் செய்தி அறிக்கைக்கும் திரைப்படத்திற்கும் இடையிலான வினோதமான ஒற்றுமையை ஒப்பிட்டு பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள், இதனால் சீன ராணுவ அதிகாரிகள் அவமானத்தில் முகம் சிவந்துள்ளனர்.

Similar News