பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த கல்லூரி மாணவியை விசாரிக்கும் என்.ஐ.ஏ.!

பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த கல்லூரி மாணவியை விசாரிக்கும் என்.ஐ.ஏ.!

Update: 2020-06-13 12:25 GMT

பாகிஸ்தானில் உள்ள லஸ்கர் இ தொய்பா என்கிற தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என கொல்கத்தா கல்லூரி மாணவியை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

மேற்கு வங்காள மாநிலத்தின் மலேயாபூர் என்ற ஊரில் இருக்கும் கல்லூரி மாணவி தானியா பர்வீன். இவர் பாகிஸ்தான் வாட்ஸ்அப் எண்ணை வைத்திருப்பதையும் மற்றும் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பான லஸ்கர் இ தொய்பாவுடன் தொடர்பு இருந்ததையும் மேற்கு வங்காளம் காவல்துறை கண்டுபிடித்துள்ளனர்.

பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூகவலைத்தளம் மூலம் ராணுவ வீரர்களிடம் பேசி ராணுவ தகவல்களை சேகரித்தாக அந்த பெண் மீது குற்றம்சாட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து மேற்கு வங்காளம் காவல்துறை மார்ச் மாதமே தான்யா பர்வீனைக் கைது செய்துள்ளனர்.

தற்போது வெள்ளிக்கிழமை அன்று அந்த பெண்ணை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் எடுத்து லஸ்கர் இ தொய்பா இயக்கத்துடன் இருக்கும் தொடர்பை பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

Source: https://www.polimernews.com/dnews/112106  

Similar News