ஈரானில் இருந்து வரும் மீனவர்களை தங்க வைக்கப்படும் இடங்களை குமரி மாவட்ட ஆட்சியர் ஆய்வு.!

ஈரானில் இருந்து வரும் மீனவர்களை தங்க வைக்கப்படும் இடங்களை குமரி மாவட்ட ஆட்சியர் ஆய்வு.!

Update: 2020-06-26 11:10 GMT

ஈரான் நாட்டுக்கு மீன்பிடி தொழிலுக்காக சென்ற குமரி மீனவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 700 மீனவர்கள் ஒப்பந்த அடிப்படையில் ஈரான் நாட்டில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர். ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் நோய் சர்வதேச பரவல் காரணமாக அந்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமான சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டில் மீன்பிடி தொழில் மேற்கொண்டு வந்த தமிழக மீனவர்கள் தாயகம் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.

கொரோனா தொற்று சர்வதேச பரவல் காரணமாக வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள தமிழக மீனவர்களை தாயகம் கொண்டு வருவதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்தியக் கடற்படையின் சமுத்திர சேது திட்டத்தின் ஒரு பகுதியாக, ஐ.என்.எஸ் ஜலஷ்வா கப்பல், 24 ஜுன், 2020 அன்று மாலை ஈரான் சென்றடைந்து. 25 ஜுன், 2020 அன்று அந்நாட்டு துறைமுகத்திற்குள் சென்றது. கட்டாய மருத்துவ மற்றும் உடமைகள் பரிசோதனைக்குப் பிறகு, 687 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு இந்தக் கப்பல் தாயகம் புறப்பட்டது.

இக்கப்பல் மூலம் தமிழகத்தினை சேர்ந்த மீனவர்கள் விரைவில் தூத்துக்குடி துறைமுகம் வந்தடைவார்கள். மீனவர்கள் சொந்த மாவட்டத்திற்கு அழைத்து வரப்படுகிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தனிமைப்படுத்தி தங்க வைக்க தூத்தூர் புனித யூதா கல்லூரி, தொலையாவட்டம் அன்னை வேளாங்கண்ணி கல்லூரி, அதங்கோடு நாராயணகுரு கல்லூரி, வெள்ளமோடி உதயா கல்லூரி, கடியப்பட்டணம் புனித ஜாண்ஸ் கல்லூரி, அழகப்பபுரம் அன்னை வேளாங்கண்ணி கல்லூரி, தோவாளை சி.எஸ்.ஐ. பெறியியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கல்லூரிகளில் செய்யப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை, கலெக்டர் பிரசாந்த் வடநேரே நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  

Similar News