புதிய வழக்கில் நாளை ஆஜராகுமாறு பத்திரிக்கையாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு மும்பை போலீசார் சம்மன்.!

புதிய வழக்கில் நாளை ஆஜராகுமாறு பத்திரிக்கையாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு மும்பை போலீசார் சம்மன்.!

Update: 2020-06-09 02:24 GMT

குடியரசு தொலைக்காட்சி மற்றும் அதன் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி பால்கர் பகுதியில் நடைபெற்ற இந்து சாமியார்கள் கொலை வழக்கில் சோனியாவை விமரிசித்ததர்காக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு ஏப்ரல் மாதம் இறுதியில் 12 மணி நேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

அப்போது இதே போன்ற 150 வழக்குகளை காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் பழி வாங்கும் போக்கில் தொடர்ந்தனர். இந்த வழக்குகள் மும்பை கோர்ட் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில் ஒரு தனிநபர் மீது இத்தனை வழக்குகளா என கேட்ட நீதிமன்றம் அனைத்து வழக்குகளும் ஒரே மாதிரியானவை என கூறி அனைத்து வழக்குகளையும் ஒரே வழக்காக பதிவு செய்யக்கோரி மும்பை போலீசாருக்கு சென்ற மாத இறுதியில் உததரவிட்டனர்.

மேலும் கோஸ்வாமிக்கு ஜாமீன் அளித்து அடுத்த 3 வாரங்களுக்கு அவருக்கு பாதுகாப்பு அளிக்குமாறும் கோர்ட் கேட்டுக் கொண்டது. இந்த நிலையில் பழிவாங்கும் நோக்கத்துடன் போடப்பட்ட இந்த வழக்கு பல்வேறு மாநிலங்கள் தொடர்புடைய வழக்கு என்பதால் இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் எனவும் கோஸ்வாமி கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில், கோஸ்வாமியை எந்தவகையிலாவது கைது செய்து ஜெயிலுக்கு அனுப்பவண்டும் என்கிற வெறியில் காங்கிரஸ் உள்ளது.

எனவே தங்கள் ஆதரவின் கீழ் மகாராஷ்டிராவை ஆளும் சிவசேனாவை வற்புறுத்தி தற்போது பாந்த்ரா தொழிலாளர் குடியேற்றப் பிரச்சினையில் அர்னாப் கோஸ்வாமி சிறுபான்மையினரை குறிவைத்து பேசினார் என புதிய வழக்கை ஜோடித்து வழக்கு பதிந்தனர். ஆரம்பத்தில் இந்த வழக்கை போதுமான ஆதாரங்கள் இல்லை என கோர்ட் தள்ளுபடி செய்த பிறகும், தற்போது கூடுதலாக ஆதாரங்களை திரட்டியதாகக் கூறி புதிய எப்.ஐ.ஆர். பதிந்துள்ளனர்.

இதன்பேரில் மும்பை காவல்துறையினர் அர்னாப் கோஸ்வாமி மற்றும் குடியரசு டிவியின் தலைமை நிதி அதிகாரி திரு சுந்தரம் ஆகியோரை 2020 ஜூன் 10 ஆம் தேதி பைத்தோனி காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பியுள்ளனர்.

அர்னாப் கோஸ்வாமி மற்றும் குடியரசு தொலைக்காட்சியின் தலைமை நிதி அதிகாரி சுந்தரம் ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில், மே 2, 2020 அன்று ஐபிசியின் ஏ, 295 ஏ, 500, 505 (2), 501 (1) (பி) (சி), 511, 120 (பி).153, 153 பிரிவுகளின் கீழ் மும்பை போலீசாரால் தாக்கல் செய்யப்பட்ட புகார் தொடர்பாக விசாரணை அதிகாரி சுரேஷ் கெய்க்வாட் முன் ஆஜராகுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த வழக்குகள் காங்கிரஸ் ஆதரவாளரான ரஸா கல்வி நலச் சங்கத்தின் செயலாளரும், தெற்கு மும்பையில் உள்ள நுல் பஜாரில் வசிப்பவருமான இர்பான் அபுபக்கர் ஷேக் என்பவரை தூண்டி பழைய சம்பவத்தின் அடிப்படையில் புனையப்பட்டதாகும்.

இந்த புகாரில் கூறப்பட்ட பாந்த்ரா போராட்டம் ஒரு வெளி மாநில பிரச்சினை அல்ல என்றும், இது வேண்டுமென்றே ஒரு குறிப்பிட்ட பிரிவினரால் நிலத்தை ஆக்கிரமிக்க தூண்டப்பட்ட போராட்டம் என்றும் , இந்த போராட்டத்தில் பங்கேற்ற நபர்கள் ஒரு மசூதியின் இடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர் என்றும் தனது தொலைகாட்சி நிகழ்ச்சியில் அர்னாப் குறிப்பிட்டிருந்தார். இப்போதும் அவர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Similar News