பாகிஸ்தான் : இஸ்லாமை அவமதித்ததாகக் கூறி சக முஸ்லீமை நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக்கொன்ற இளைஞர்.!

பாகிஸ்தான் : இஸ்லாமை அவமதித்ததாகக் கூறி சக முஸ்லீமை நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக்கொன்ற இளைஞர்.!

Update: 2020-07-30 02:28 GMT

இஸ்லாம் அல்லது முஹம்மது நபிகளை சந்தேகிப்பது அல்லது அவதூறு செய்வது பாகிஸ்தானில் கடும் தண்டனைக்குரிய குற்றமாகும். சமீபத்திய உதாரணமாக, பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் முஸ்லீம் ஒருவர் பெஷாவரில் உள்ள நீதிமன்றத்திற்குச் சென்று இஸ்லாமை அவதூறு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு (blasphemy), 'குற்றவாளியாக' கருதப்பட்ட சக முஸ்லீம் ஒருவரைப் புதன்கிழமையன்று சுட்டுக்கொன்றதாக, காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தின் கடுமையான பாதுகாப்பை மீறி எவ்வாறு அவரால் உள்ளே வரமுடிந்தது என அறியப்படவில்லை. ஒரு வழியாகத் தாக்குதல் நடத்திய நபரைக் கைது செய்தனர். சுடப்பட்ட நபர் தாஹிர் ஷாமின் அஹமத் தான் தான் இஸ்லாமின் தூதுவர் என்று கூறியதாகவும், அதற்காக அவர் இஸ்லாமை அவதூறு செய்த வழக்கில் இரண்டாண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் காவல்துறையினரால் கூறப்படுகிறது. சுடப்பட்ட பின் அஹ்மத் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் முன்பே இறந்துவிட்டார்.

பாகிஸ்தானில் இஸ்லாமைப் பற்றி 'அவதூறு' பரப்புவது கடும் குற்றமாகக் கருதப்படுகின்றது, அவ்வாறு செய்வோருக்கு ஆயுள் தண்டனை முதல் மரணதண்டனை வர வழங்கப்படுகின்றது. ஆனாலும் கூட பாகிஸ்தானைச் சேர்ந்த, கும்பல்களும் தனிநபரும் சட்டத்தை தங்கள் கையில் எடுக்கின்றனர்.

இஸ்லாம் குறித்த அவதூறுகளுக்கு இது வரை மரண தண்டனை வழங்கப்படவில்லை என்றாலும் குற்றச்சாட்டுகள் கூட பாகிஸ்தானில் கலவரத்தை ஏற்படுத்துகின்றன. பெரும்பாலும் அவதூறு வழக்குகள் சிறுபான்மையினரை அச்சுறுத்தவும் மற்றும் தனிப்பட்ட நபரை பழிவாங்கவும் போலியாக பயன்படுத்தப்படுகின்றன என்று மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன.

இதைப்போன்றே 2011-இல் அவதூறு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இருந்த ஆசியா பீபி என்ற கிறித்துவரை ஆதரித்த முஸ்லீம் பஞ்சாப் ஆளுநரை அவரது பாதுகாவலரே சுட்டுக்கொன்றார். உலக மீடியாக்களின் கவனத்தைப் பெற்ற இந்த வழக்கில் ஆசியா பீபிக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டாலும் எட்டாண்டுகளுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டார். விடுதலைக்குப் பின்பு இஸ்லாமியவாதிகளிடமிருந்து பல அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட இவர் சென்ற ஆண்டு கனடாவில் வசிக்கும் தன் மகள்களிடம் சென்றடைந்தார்.

source: https://swarajyamag.com/insta/major-reforms-in-school-board-exams-announced-in-nep-regional-medium-of-instruction-gets-encouraged

Similar News