கர்நாடகாவில் சம்பளம் இல்லாமல் தவித்து வந்த தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இனிப்பான அறிவிப்பு.!

கர்நாடகாவில் சம்பளம் இல்லாமல் தவித்து வந்த தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இனிப்பான அறிவிப்பு.!

Update: 2020-07-09 02:11 GMT

நாடு முழுவதும் கொரோனா நோய் தடுப்பை முன்னிட்டு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் ஏராளமானோர் வேலையையும், சம்பளத்தையும் இழந்தனர். தனியார் பள்ளி ஆசிரியர்களும் சம்பளம் பெறமுடியாமலும், வேலைக்கும் செல்ல முடியாமலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் இது போல கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து ஊதியம் இன்றி தவிக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு உதவும் நோக்கத்தில் அரசு ஆசிரியர்கள் சங்கம் தங்கள் ஒருநாள் சம்பளத்தை அளித்துள்ளனர்.

இது குறித்து மாநில உயர்நிலை பள்ளி உதவி ஆசிரியர்கள் சங்க தலைவர் எச்.கே.மஞ்சுநாத் கூறுகையில் " தனியார் பள்ளிகள் மூடப்பட்டு 5 மாதங்கள் ஆகிறது, நிர்வாகத்தால் நிதி திரட்ட முடியவில்லை, தனியார் பள்ளி ஆசிரியர்கள் 3 மாதங்களுக்கு மேல் சம்பளம் இல்லாமல் தவிக்கிறார்கள், எனவே நாங்கள் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு உதவிடும் வகையில் ஒருநாள் சம்பளத்தை அளிக்க ஒப்புக் கொண்டுள்ளோம் என்று கூறினார். அவர் மேலும் கூறுகையில் 2 நாள் சம்பளத்தை அளிக்க வேண்டும் என்பதுதான் எண்கள் ஆசை , ஆனால் நாங்கள் ஏற்கனவே பிரதமர் நிதி, முதல்வர் நிவாரண நிதி, வெள்ள நிவாரண நிதி என வழங்கிவிட்டோம் என்றார்.

இதன் மூலம் தனியார் மற்றும் உதவி பெறாத பள்ளிகளில் பணியாற்றும் 1.4 இலட்சம் தங்கள் சகாக்களுக்கு கூடுமானவரை உதவ முடியும் என்றும் மஞ்சுநாத் கூறினார்.    

https://swarajyamag.com/insta/karnataka-govt-teachers-to-donate-one-days-salary-for-private-counterparts-who-havent-been-paid-since-april

Similar News