இந்து சமுதாய ஓட்டுக்கள் தேவையில்லை என முடிவெடுத்து விட்டாரா மு.க.ஸ்டாலின்? ஒரு பார்வை!

இந்து சமுதாய ஓட்டுக்கள் தேவையில்லை என முடிவெடுத்து விட்டாரா மு.க.ஸ்டாலின்? ஒரு பார்வை!

Update: 2020-07-19 06:59 GMT

கறுப்பர் கூட்டத்தின் கந்ந சஷ்டி அவமதிப்பு விவகாரத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் இன்னமும் மௌனமாக இருப்பது ஏன் என இந்து சமுதாய மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

கறுப்பர் கூட்டத்தின் கந்த சஷ்டி அவமதிப்பு விவகாரம் என்பது அனைத்து இந்து சமுதாய மக்களின் வெறுப்பை சம்பாதித்துள்ளது. இதனை அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும், மீடியாக்களும் தங்கள் பங்கிற்கு கண்டித்தோ அல்லது ஆதரவோ தெரிவித்த வண்ணம் உள்ளனர். ஆனால் தி.மு.க-வின் தலைவர் ஸ்டாலினோ, அல்லது அனைத்திற்கும் முந்திக் கொண்டு ஓடி வரும் மகனாகிய உதயநிதியோ இதுவரை இது பற்றி ஒரு வரி கூட அறிக்கை விடவில்லை. மாறாக, இந்த சம்பவம் தமிழ்நாட்டில் நடந்ததது அல்ல வேறு ஏதோ மாநிலத்தில், வேறு சமுதாய மக்களிடத்தில் நடந்தது போல சத்தமின்றி உள்ளனர். காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு சட்டம் அமல்படுத்திய பொழுது கூட ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் இன்றோ இந்த முருக கடவுள் அவமதிப்பை கவனிக்க நேரமின்றி அல்லது மனமின்றி இருக்கின்றனர்.

இது பற்றி இந்து மத அரசியல் விமர்சகர் ஒருவரிடம் கேட்ட பொழுது, "தமிழக அரசை கொரோனோ விஷயத்தில் இதை செய்தீர்களா? அதை செய்தீர்களா? என நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் அறிக்கை அளித்தவர்கள், "ஒன்றிணைவோம் வா" என கைகாசை செலவழித்து நாடகமேற்றி மீடியாக்களில் பரவ விட்டவர்கள், சாத்தான்குளம் பிரச்சினையில் ஓடோடி சென்று அதிலும் இ-பாஸ் கூட பெறாமல் பயணம் செய்தவர்கள், ரஜினி கேள்வி கேட்டாரா? ரஜினி அறிக்கை விட்டாரா என அனைத்திற்க்கும் ரஜினியை விவாதத்திற்க்கு அழைத்தவர்கள் இன்றோ இந்து சமுதாய மக்கள் கறுப்பர் கூட்ட விஷயத்தில் மன உலைச்சலுக்கு ஆளாகி இருக்கும் போது இதைபற்றி மூச்சு கூட விட மறுப்பதேன்?" என கேள்வி எழுப்பினார்.

இந்து சமுதாய மக்களின் ஓட்டு தேவையில்லை என முடிவு செய்து விட்டார்கள் போலும் தி.மு.க-வினர்!

Similar News