பிரதமர் மோடியின் ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு வெற்றி : கல்வானில் இருந்து பின்வாங்கி செல்கின்றன சீன படைகள்.!

பிரதமர் மோடியின் ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு வெற்றி : கல்வானில் இருந்து பின்வாங்கி செல்கின்றன சீன படைகள்.!

Update: 2020-07-06 08:40 GMT

லடாக் எல்லை பகுதியில் சென்ற ஜூன் மாதம் 15 ந்தேதி நடை பெற்ற சண்டையில் இரு தரப்பு ராணுவத்துக்கு இடையே நடைபெற்ற மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் பலியானதை தொடர்ந்து பிரச்சினை மிகவும் பெரிதானது.

இந்த நிலையில் எல்லையில் மேலும் பதற்றத்தை தவிர்க்கும் வகையில் முதலில் ராணுவ அதிகாரிகள் நிலையில் பேச்சு வாரத்தை நடத்தப்பட்டது. அதன் பிறகு ராணுவ உயர்நிலை அதிகாரிகள் அந்தஸ்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

மேலும் இந்திய தரப்பில் வர்த்தக ரீதியான தடைகளும் சீன பொருட்கள் மீது விதிக்கப்பட்டன. இந்த நிலையில் சென்ற 31 ந்தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து இந்திய தரப்பில் எழுப்பப்பட்ட ஆட்சேபங்களை அடுத்து சீன தரப்பில் இறங்கி வந்ததாகவும், அதன் அடிப்படையிலும், பிரதமர் மோடியின் ராஜதந்திர நடவடிக்கைகளை அடுத்தும் லடாக் எல்லையில் கல்வானில் உள்ள சில பகுதிகளில் இருந்து சீன படைகள் பின் வாங்கியிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

ரோந்துப் புள்ளி பதினான்கில் இருந்து சீன துருப்புகள் வெளியேறி பின்னோக்கி செல்வதாகவும், அவர்கள் அங்கு அமைத்திருந்த கூடாரங்களை அப்புறப்படுத்தி எடுத்து சென்று கொண்டிருப்பதாகவும் தகவல்கள் மதியம் 12,30 மணியலவில் வெளியாகின. கூடாரங்களையும், பல அப்புறப்படுத்தப்பட்ட கட்டுமானங்கள் மற்றும் வீரர்களை சுமந்த வண்ணம் சீன இராணுவத்தின் வாகனங்கள் கோக்ரா ஹாட் ஸ்பிரிங் பகுதியில் காணப்படுகிறது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன

லடாக்கில் உள்ள கல்வானில் இருந்து சுமார் 2 கி.மீ. அளவிற்கு சீன படைகள் பின் வாங்கி சென்று கொண்டிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. 

Similar News