கந்தனை தவறாக எண்ணியவர்கள்.. இன்னும் ஒரு ஆண்டுக்கு கம்பி எண்ண வேண்டியது தான் - கறுப்பர் கூட்டம் நிர்வாகிகள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத குண்டாஸ் சட்டம் பாய்ந்தது!

கந்தனை தவறாக எண்ணியவர்கள்.. இன்னும் ஒரு ஆண்டுக்கு கம்பி எண்ண வேண்டியது தான் - கறுப்பர் கூட்டம் நிர்வாகிகள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத குண்டாஸ் சட்டம் பாய்ந்தது!

Update: 2020-07-28 06:04 GMT

கந்தசஷ்டி கவசத்தை இழிவாக பேசிய வழக்கில் ஏற்கனவே கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த சுரேந்திரன் நடராஜன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ள நிலையில், தற்போது சேனல் நிர்வாகி செந்தில்வாசன் மீதும் குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.

கந்த சஷ்டி கவசத்தை இழிவாக விமர்சித்ததாக கைது செய்யப்பட்டுள்ள சுரேந்திரன் நடராஜன் மீது நேற்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் ஓராண்டுக்கு பிணையில் வர முடியாது.

அந்த வகையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் நிர்வாகி செந்தில் வாசனும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கறுப்பர் கூட்டம் யூ ட்யூப் சேனலை நிர்வகிப்பதில் தொடங்கி, அதன் நிதி விவகாரம், பணியாளர் ஊதியம் உட்பட பல்வேறு முக்கிய பொறுப்புகள் செந்தில்வாசன் வசமிருந்துள்ளது.

வங்கி கணக்குகளை கையாள்வது முதற்கொண்டு செந்தில் வாசன் வசமே எல்லா அதிகாரமும் இருந்துள்ளது. அவரை 4 நாட்களில் காவலில் எடுத்து விசாரித்த சைபர் கிரைம் காவல்துறையினர், இன்றுடன் விசாரணை முடிந்து, நீதிமன்ற காவலில் மீண்டும் சிறையில் அடைத்தனர். 

Similar News