புதுச்சேரி : கார்கில் வெற்றி தினம் நினைவிடத்தில் துணைநிலை ஆளுநர், முதல்வர் ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை.!

புதுச்சேரி : கார்கில் வெற்றி தினம் நினைவிடத்தில் துணைநிலை ஆளுநர், முதல்வர் ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை.!

Update: 2020-07-27 04:09 GMT

இந்தியாவின் கார்கில் பகுதியில் 1999ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு இடையே கடுமையான போர் நிகழ்ந்தது இதில் பாகிஸ்தான் படைகளை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இந்த நாளை ஆண்டு தோறும் கார்கில் வெற்றி தினமாகவும் கொண்டாடி வருகிறோம். இந்நிலையில் புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள கார்கில் வெற்றி நினைவிடத்தில் போரின் போது உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தம் நிகழ்ச்சி அரசு சார்பில் நடைபெற்றது.

இதில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் சிவகொழுந்து, தலைமைச்செயலர், டிஜிபி மற்றும் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து, 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். மேலும் பட்ஜெட் கூட்டத்தொடர் சிறப்பாக நடத்தியதற்கு சபாநாயகர், சிவகொழுந்து மற்றும் முதலமைச்சர் நாராயணசாமிக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வாழ்த்துகளை தெரிவித்தார். 

Similar News