தீவிரவாதி யாக்கூப் மேமன் தூக்கிலப்பட்ட நாளில் அவனை நினைவு கூர்ந்து, உருகிய தமிழ் ஊடகவியலாளர் கவின் மலர்!

தீவிரவாதி யாக்கூப் மேமன் தூக்கிலப்பட்ட நாளில் அவனை நினைவு கூர்ந்து, உருகிய தமிழ் ஊடகவியலாளர் கவின் மலர்!

Update: 2020-08-02 12:02 GMT

1993-ஆம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டுவெடிப்புகள் நடைபெற்றன. அந்த குண்டு வெடிப்புகளின் முக்கியக் குற்றவாளி யாக்கூப் மேமனும் அவரது சகோதரருமான டைகர் மேமன். பல்வேறு கட்ட விசாரணைகள், நீதிமன்ற வாதங்களின் அடிப்படையில் யாக்கூப் மேமன் பல குண்டுகளை வைத்து நூற்றுக்கணக்கான மக்களை கொன்ற தீவிரவாதி என உறுதியானது.

2007-ஆம் ஆண்டு முதல் சிறையில் இருந்த யாக்கூப் மேமன் 2015-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30-ஆம் தேதி தூக்கில் இடப்பட்டார்.

நூற்றுக்கணக்கன மக்களை கொன்ற தீவிரவாதியை நினைவு கூர்வதாக தமிழ் ஊடகவியலாளர் கவின் மலர் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

தீவிரவாதிக்காக உருகும் கவின் மலரின் பதிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Full View

தூக்கு தண்டனைக்கு எதிரானவர்கள் என கூறிக்கொண்டாலும், இந்தியாவை அழிக்க துடித்துக் கொண்டு இருக்கும் தாவூத் இப்ராஹிமின் கூட்டாளியாக செயல்பட்ட ஒரு தீவிரவாதிக்காக பொங்குவதெல்லாம் ரொம்ப ஓவர் என நெட்டிசன்கள் கவின் மலரை வறுத்து எடுத்து வருகின்றனர்.


ரத்த வெறி பிடித்த தீவிரவாதிகளுக்கு ஊடகவியலாளர்கள் என சொல்லிக்கொள்பவர்கள் உருகுவது சரியா என்ற அடிப்படை கேள்வியும் எழுகிறது.

Similar News