முரட்டு மீசையுடன் புதிய கெட்டப்பில் களமிறங்கும் அருண் விஜய் "சினம்" படத்தின் அப்டேட்.!

முரட்டு மீசையுடன் புதிய கெட்டப்பில் களமிறங்கும் அருண் விஜய் "சினம்" படத்தின் அப்டேட்.!

Update: 2020-08-05 09:47 GMT

புதிய கெட்டப் உடன் களமிறங்கும் அருண் விஜய் இவர் ரசிகர்களுக்கு அளித்திருக்கும் புதிய தகவல். நடிகர் அருண்விஜய் தமிழில் பல படங்கள் நடித்து வந்திருக்கிறார் அதனை அடுத்து நினைத்தாலே இனிக்கும் என்ற படத்தை இயக்கிய இயக்குனர் குமரவேலுடன் சினம் என்ற படத்தில் நடித்து வருகிறார். கொரோனா லாக்டவுன் காரணமாக இந்தப் படத்தின் பணிகள் தள்ளிப்போய் கொண்டே இருக்கின்றது அதனை அடுத்து தற்பொழுது படத்தின் டப்பிங் பணிகளை ஆரம்பித்திருக்கிறார் அருண்விஜய்.இந்த மகிழ்ச்சியான செய்தியை அவரது ரசிகர்களுக்கு ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

அருண்விஜய் நடிப்பில் சென்ற வருடம் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பை பெற்ற படம் "தடம்". புதிய கதைக்களத்துடன் தமிழ் திரையுலகில் மிகப்பெரிய வெற்றி வாகை சூடியது. மேலும் இந்த திரைப்படம் இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வசூலை அள்ளியது. நடிகர் அருண் விஜய் நடித்த படம் தமிழில் மட்டுமல்லாமல் தமிழ்,தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு அந்த மக்களின் மனதை கவர்ந்து இருக்கிறார். இவர் நடிக்கும் அக்னிச்சிறகுகள்,வா டீல், பாக்சர் ஆகிய படங்கள் அவ்வப்போது அப்டேட் கல்கண்டு வந்தாலும் தற்போது சினம் படம் குறித்து இவர் டப்பிங் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். இது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது.

நடிகர் அருண்விஜய் தற்போது அவர் அப்பா விஜயகுமார் ஆகியோர் இணைந்து நடித்த காட்சிகளுக்கு டப்பிங் பணிகளை தொடங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News