சாக்லேட் சாப்பிடுவதன் நன்மைகள் மற்றும் தீமைகள் - ஒரு நாளைக்கு எவ்வளவு சாக்லெட் சாப்பிடலாம்.?

சாக்லேட் சாப்பிடுவதன் நன்மைகள் மற்றும் தீமைகள் - ஒரு நாளைக்கு எவ்வளவு சாக்லெட் சாப்பிடலாம்.?

Update: 2020-10-02 11:33 GMT

சாக்லெட் என்ற பெயரைச் சொன்னாலே குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். அதற்கு முக்கிய காரணம் அதனுடைய சுவைதான். சாக்லேட் இனிப்பு சுவை கொண்டது. இதன்காரணமாகவே சிறியவர்கள் முதல் இளம் வயதினர் வரை சாக்லேட் மீதான மோகம் இருந்து வருகிறது.

ஆனால் இன்றைய பெற்றோர் சாக்லேட் எவ்வளவு அளவு தன்னுடைய குழந்தை சாப்பிடவேண்டும். சாக்லேட் சாப்பிடுவதன் நன்மைகள் மற்றும் தீமைகள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும். எவ்வளவுதான் சாக்லேட் ருசிகரமாக இருந்தாலும் 'அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு' என்பது போல இதையும் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவுதான் உட்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு ஒருவர் 28 கிராம் அளவுதான் சாக்லெட் உட்கொள்ள பரிந்துரைக்கப் படுகிறார்கள். அதிகமாக சாப்பிட்டால் பக்க விளைவுகளை சந்திக்க நேரிடலாம்.

சாக்லேட் சாப்பிடுவதினால் ஏற்படும் நன்மைகள்:

சாக்லேட் சாப்பிடுவதனால் கொலஸ்ட்ராலை குறைக்கிறது. மேலும் இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது சாக்லேட் அமிலம் அதிகமாக இருப்பதால் இதயத்திற்கு வலு சேர்க்கிறது. இதய நோய் வருவதற்கான பாதிப்புகள் குறையும்.

ரத்தத் தட்டுக்கள் கொத்தாக சேராமல் பார்க்கிறது. ரத்தம் உறைவது தவிர்க்கப்படுகிறது. சிறுநீரக கற்களுக்கு எதிராக நன்மை விளைவிக்கிறது.

குறிப்பாக டார்க் சாக்லெட்கள் உடலில் பிரீ எக்கலம் பிசியா என்ற முன் சூல் வலிப்பை ஏற்படாமல் நமது உடலை பாதுகாக்கிறது.

சாக்லேட் உண்ணுவதில் என்னதான் நன்மைகள் இருந்தாலும் தீமைகளும் உள்ளன. அவை அதிகமாக சாக்லேட் சாப்பிடுவதால் தலைவலி வருகிறது .

மூளைக்கு செல்லும் ரத்தநாளங்களில் பாதிப்பை ஏற்படுகிறது.

அக்கியை ஏற்படுத்தும் கிருமிகளையும் சாக்லேட் உற்பத்தி செய்கிறது. இதனால் நோயில் இருந்து மீண்டவர்கள் டார்க் சாக்லெட்டுகள் உண்ணாமல் தவிர்ப்பது நல்லது.

சாக்லேட்டில் உள்ள கொக்கோ கிருமிகளை எதிர்த்து வினைபுரியும். இதனால் பற்கள் அழுகும் நிலை ஏற்படும். நரம்பு குறைபாட்டையும் ஏற்படுத்துகிறது.

எனது விளம்பரத்தில் காட்டுவது போல தினம் தினம் 'ஸ்வீட் எடு கொண்டாடு' என்று இல்லாமல் பண்டிகை நாட்களில் மட்டுமே சாக்லெட்டை சாப்பிட்டு அதன் பயன்களைப் பெறலாம்.

Similar News