மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா முன்னிலை வகிக்கிறதா.? போராளிகள் தூக்கிய போலி செய்தியை தவிடு பொடியாக்கிய ஆதாரம்.!

மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா முன்னிலை வகிக்கிறதா.? போராளிகள் தூக்கிய போலி செய்தியை தவிடு பொடியாக்கிய ஆதாரம்.!

Update: 2019-07-15 11:23 GMT

பசுவதைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொண்டே மாட்டிறைச்சி ஏற்றுமதியை பாஜக ஊக்குவிக்கிறது என்ற போலி செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதன் பின்னால் உள்ள உண்மை நிலை குறித்து பார்ப்போம்.


இந்தியாவின் அரசியல் அமைப்பில் பசுப் பாதுகாப்பு குறித்து சொல்லப்பட்டுள்ளது. இந்துக்களில் ஒரு பகுதியினர் பசுவை தாயாக வணங்குகின்றனர். இந்தியாவில் கேரளம், மேற்கு வங்கம் மற்றும் வட கிழக்கு மாநிலங்கள் தவிற மற்ற இடங்களில் பசுவை வெட்டத் தடை இருக்கிறது.


இந் நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியா பசு இறைச்சியை ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று திட்டக் கமிஷன் முன் வைக்கப்பட்ட ஒரு யோசனை நிராகரிக்கப்பட்டுவிட்டது. மாட்டிறைச்சி ஏற்றுமதி என்ற பெயரில் பசு இறைச்சி ஏற்றுமதி செய்யப்படக் கூடாது என்ற விதிமுறை உள்ளது.


இப்போது கூட பசு, காளை மாடு, கன்றுக்குட்டி இறைச்சி ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா உலக அளவில் முதலிடம் என்று பரவி வரும் செய்தியும் போலியாகும். எருமை மாட்டிறைச்சி ஏற்றுமதியில் தான், இந்தியா உலகில் மூன்றாம் இடம் வகிக்கிறது. முதல் இடத்தில் பிரேசில் நாடு தான் இருந்து வருகிறது. இந்த தகவலை எல்லாம் மறைத்து மத ரீதியிலான குழப்பத்தை உண்டாக்கி அரசியல் செய்யலாம் என்ற நோக்கில் ஒரு கும்பல் போலி செய்தியை பரப்பி வருவது குறிப்பிடத்தக்கது.


Similar News