கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதில் போட்டியா? உலக சுகாதார நிறுவனம் தகவல்

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதில் போட்டியா? உலக சுகாதார நிறுவனம் தகவல்

Update: 2020-04-18 02:26 GMT

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதில் போட்டியா? உலக சுகாதார நிறுவனம் தகவல்

கொரோனா தாக்கத்தால் மனித சமுதாயம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக விளங்குகிறது. மனித சமுதாயம் பூமியில் இனி வாழ முடியுமா என்ற அச்சத்தை உருவாக்கிய கொரோனா வைரஸ், விலங்கள் மூலம் மனிதனுக்கு பரவிய மிக கொடிய வைரஸாக இருப்பதால் மனித சமுதாயத்தை மீட்கும் பொருட்டு அதற்கான தீர்வை நோக்கி உலக நாடுகள் பயணிகின்றன.

கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை மீட்கும் விதமாக இந்தியா, சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், இஸ்ரேல், இத்தாலி, ரஷ்யா உள்ளிட்ட இருபதுக்கு மேற்பட்ட நாடுகள் கொரோனா வைரஸ் எதிர்ப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் பல்வேறு மருந்து உற்பத்தி நிறுவனங்கள் கடும்போட்டி போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்திய மருந்து நிருவனங்களான சைடஸ் கேடிலா, சீரம் ஆகிய இரண்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உலக சுகாதார நிறுவனத்திடம் பதிவு செய்துள்ளது என்கிறது ஐ.நா. சுகாதார நிறுவனம்

உலக அளவில் மூன்று தடுப்பு ஊசிகள் பரிசோதனை அளவில் இருகிறது. பல்வேறு நாடுகளின் நோய் தடுப்பு மருந்து நிறுவனங்கள் மூலம் சுமார் 70 தடுப்பு மருந்துகள் தற்போது பரிசோதனை கட்டத்திலேயே உள்ளது குறிப்பிட தக்கது.

சீனா, அமெரிக்கா  மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உரிய அனுமதி பெறாமல் சில மருந்துகளை விற்பனை செய்து வந்தனர். ஆனால் அந்த மருந்துகளால் எந்த பலனும் இல்லை இதன் காரணமாக அமெரிக்காவும் சீனாவும் மோதி கொள்கின்றனர்

இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒப்புதல் பெற்ற சைடஸ் கேடிலா, இப்கோ லேப்ஸ், வால்லஸ் பர்மா நிறுவனம் தயாரித்த ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்துகள் இருபது நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ள இந்தியா விரைவில் கொரோனா எதிர்ப்பு மருந்தை உலகுக்கு அளிக்கும் என எதிர் பார்க்கபடுகிறது.


Similar News