கொரோனாவுக்கு பயந்து, சிறப்பு பயிற்சி பெற்ற டாக்டர்கள் தப்பி ஓட்டம். கர்நாடகாவில் நிகழ்ந்த சம்பவம்.!

கொரோனாவுக்கு பயந்து, சிறப்பு பயிற்சி பெற்ற டாக்டர்கள் தப்பி ஓட்டம். கர்நாடகாவில் நிகழ்ந்த சம்பவம்.!

Update: 2020-04-15 09:29 GMT

கர்நாடகா மாநிலத்தில் கொரோனாவுக்கு பிரத்யேக பயிற்சி பெற்ற டாக்டர்கள் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர கன்னடா மாவட்டம், கார்வாரில் உள்ள கதம்பா கடற்படை தளத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இவர்கள் அனைவரும் பதஞ்சலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்க 2 மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

பின்னர் 2 மருத்துவர்களும் திங்கட்கிழமை பதஞ்சலி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

கீழ் தளத்தில் காரை நிறுத்தி விட்டு வருகிறோம் என்று கூறி சென்றனர். ஆனால் அதன் பின்னர் திரும்பி வரவில்லை.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயந்து தப்பி ஓடிவிட்டதாக சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக உத்தர கன்னடா மாவட்ட பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி ரோஷன் தப்பி ஓடிய இரண்டு டாக்டர்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மருத்துவர்கள் கடவுளுக்கு சமமானவர்கள், இவர்களே இப்படி பயந்தால் சாதாரண மனிதர்கள் கொரோனா வைரஸை பார்த்து பயப்படமாட்டார்களா.

உலகம் முழுவதும் லட்சக்கணக்கானவர்களை மருத்துவர்கள் காப்பாற்றி வரும் வேளையில் கர்நாடகாவில் 2 டாக்டர்கள் மருத்துவமனையை விட்டு ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Similar News