சீனாவில் இருந்து வெளியேறும் அமெரிக்க, ஜப்பானிய நிறுவனங்களை இழுக்கும் குஜராத், உத்திர பிரதேச அரசுகள்!

சீனாவில் இருந்து வெளியேறும் அமெரிக்க, ஜப்பானிய நிறுவனங்களை இழுக்கும் குஜராத், உத்திர பிரதேச அரசுகள்!

Update: 2020-04-17 14:29 GMT

 சீனாவில் இருந்து வெளியேறும் அமெரிக்க, ஜப்பானிய நிறுவனங்களை குஜராத் உத்திர பிரதேச மாநில அரசுகள் இழுக்க துவங்கியுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் துவங்கிய அமெரிக்க சீன வர்த்தக போரில் வெளியேற சிந்திக்கும் அமெரிக்க நிறுவனங்களையும் தற்போது ஜப்பான் அரசு அறிவித்துள்ள திட்டத்தின் கீழ் சீனாவில் இருந்து வெளியேறும் ஜப்பானிய நிறுவனங்களையும் குஜராத், உத்திர பிரதேச மாநில அரசுகள் இழுக்க துவங்கி உள்ளது.

உத்திர பிரதேசத்தின் தொழில் வளர்ச்சி & சிறுகுறு தொழில் துறைக்கான கூடுதல் தலைமை செயலர் குமார் அஸ்வதி கூறுகையில் இந்த ஆண்டு இறுதியில் லக்னோவில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முலம், சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை கவர முடியும் என்றும் கடந்த 2018 பிப்ரவரியில் ₹46,800 கோடி முதலீட்டு ஒப்பந்தங்களில் ₹12,500 கோடி மதிப்பிலான பணிகள் முதற்கட்ட பணியை துவங்கி உள்ளது என்று கூறினார்.

குஜராத் மாநிலத்தின் தொழிற்துறை முதன்மை செயலாளர் மனோஜ் தாஸ் கூறுகையில் ஜப்பான் வெளிவர்த்தக அமைப்பு (Japan External Trade Organisation - JETRO), அமெரிக்க இந்திய வியாபார சபை (US India Business Council - USIBC), அமெரிக்க இந்திய கூட்டுதிறன் மன்றம் (US India Strategic Partnership Forum - USISPF) ஆகியவற்றிற்கு தொழில் துவங்க அழைப்பு விடுத்து கடிதம் எழுதப்பட்டுள்ளது. தனியாக ஜப்பானியர்கள் தொழில் துவங்க ஜப்பானிய பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

குஜராத்தின் தொழில் வர்த்தக அமைச்சர் மோனா கந்தார் கூறுகையில் USISPF மூலம் 2019 ஏப்ரலில் 200 அமெரிக்க முதலீட்டை பெற்றுள்ளது தற்போது சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை கவர முடியும் என்றும் 2013 டிசம்பரில் ₹800 கோடியாக இருந்த ஜப்பான் முதலீடு 2019 செப்டம்பரில் ₹15,700 கோடியாக அதிகரித்துள்ளது எனவும் 2013 டிசம்பரில் ₹5,500 கோடியாக இருந்த அமெரிக்க முதலீடு 2019 செப்டம்பரில் இரட்டிப்பாக ₹10,691 கோடியாக அதிகரித்துள்ளது என்றார்.

சீன வைரஸ் கிருமியான தீநுண்மி (கொரோனா) தடுப்பு நடவடிக்கை ஒரு புறம் இருந்தாலும் மறுபுறம் பொருளாதார இழப்பை தவிர்த்து முன்னேற அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது, இதன் மூலம் வேலைவாய்ப்பை இழப்பை தவிர்த்து கூடுதல் வாய்ப்புகளை உருவாக்க முனைந்துள்ளன.

Similar News