இயற்கையை மதித்து, பேரழிவை தவிர்க்க சித்திரைத் திருநாளில் உறுதியேற்போம்!

இயற்கையை மதித்து, பேரழிவை தவிர்க்க சித்திரைத் திருநாளில் உறுதியேற்போம்!

Update: 2020-04-13 13:08 GMT

இயற்கையை மதித்து, பேரழிவை தவிர்க்க சித்திரைத் திருநாளில் உறுதியேற்போம்!

வசந்த விழா கொண்டாட்டங்களுக்கு வழிவகுக்கும் சித்திரை திருநாளை உலகெங்கும் கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒரு காலத்தில் சித்திரை மாதம் செல்வம் பொங்கும் மாதமாக திகழ்ந்தது. காரணம் சித்திரையில் தான் அறுவடை முடிந்து களஞ்சியங்கள் நிறையும். அப்போது மக்கள் வாழ்வில் வளம் கொழிக்கும் என்பதால் சித்திரை மாதம் முழுவதும் ஊர் முழுக்க திருவிழாக்கள் நடைபெறும். சித்திரை முழுநிலவு நாளில்தான் மாமல்லபுரத்திலும், பூம்புகாரிலும் இந்திர விழா, வசந்த விழா என எண்ணற்ற விழாக்களை தமிழர்கள் கொண்டாடுவர். சித்திரை மாதத்தில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். எனவே தான் தை முதல் நாளாம் உழவர் திருநாளை தமிழ் புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாடி மகிழும் போதிலும், சித்திரை திருநாளுக்கும் தனிச்சிறப்பு உண்டு. சித்திரைத் திருநாள் தமிழர் வாழ்வில் தவிர்க்க முடியாத நாளாகும்.

சித்திரைத் திருநாள் என்றாலே மக்கள் பொது இடங்களில் கூடி மகிழ்வதும், கொண்டாடுவதும் தான். கோடை வெயிலின் கடுமையை மாலை வேளைகளில் கடற்கரைகள், ஆற்றங்கரைகள், பூங்காக்கள் போன்ற காற்றோட்டம் நிறைந்த இடங்களில் கூடுதல், அறுவடைக்குப் பிறகு மக்களின் கைகளில் பணம் இருக்கும் என்பதால் அதை வைத்து மகிழ்ச்சியாக கொண்டாடுதல் ஆகியவை தான் சித்திரையின் அடையாளங்கள் ஆகும். ஆனால், இன்றைய நிலை அதற்கு நேர்மாறாக இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலுக்கு அஞ்சி அனைவரும் வீடுகளை விட்டு வெளியில் வர அஞ்சி முடங்கிக் கிடக்கிறோம். மக்களின் பொருளாதாரம் தொடங்கி, நாட்டின் பொருளாதாரம் வரை அனைத்தும் நலிவடைந்து கிடக்கின்றன. இந்நிலை மாற வேண்டும்.

இயற்கையை மனிதர்கள் மதிக்காததும், சுற்றுச்சூழலை சீரழித்ததும் தான் கொரோனா வைரஸ் பரவல் குறித்த அனைத்து தீமைகளுக்கும் காரணம் ஆகும். காலநிலை மாற்றம் குறித்த எச்சரிக்கைகளை மதித்து நடந்திருந்தால் இத்தகைய பேரழிவுகள் தவிர்க்கப்பட்டிருக்கும். இனியாவது இத்தகைய நிகழ்வுகளிலிருந்து பாடம் கற்போம். இயற்கையை மதித்து நடப்போம்; சுற்றுச்சூழலைக் காப்போம்; உழவுக்கு முன்னுரிமை அளிப்போம்; அதன்மூலம் மக்கள் நிறைவான வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்வதை உறுதி செய்வோம். இந்த இலக்கை எட்டுவதற்காக இந்த சித்திரைத் திருநாளில் நாம் அனைவரும் உறுதியேற்றுக் கொள்வோம் என பாமக நிறுவனர் ராமதாசு விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

Similar News