காலையில் இன்ஸ்பெக்டர், மாலையில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம், என்ன நடந்தது பின்னணியில் ராமதாஸ்?

காலையில் இன்ஸ்பெக்டர், மாலையில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம், என்ன நடந்தது பின்னணியில் ராமதாஸ்?

Update: 2020-04-16 12:34 GMT

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்ற பாமக நிர்வாகியை இன்ஸ்பெக்டர் சுதாகர் இரவு நேரத்தில் குடிபோதையில் சென்று கண்மூடித்தனமாக தாக்கினார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்ஸ்பெக்டர் சுதாகர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இதன் பின்னர் கள்ளக்குறிச்சி எஸ்.பி., ஆயுதப்படைக்கு இன்ஸ்பெக்டர் சுதாகரை மாற்றி உத்தரவிட்டார்.

ஒரு சில நாட்கள் கள்ளக்குறிச்சி எஸ்.பி. அலுவலகத்தில் இருந்தார். புதிய மாவட்டமாக கள்ளக்குறிச்சி உருவானதால் இன்னும் ஆயுதப்படை பிரிவு உருவாக்கவில்லை.

இந்நிலையில், இன்று காலை கடலூர் மாவட்டம் பெண்ணாடம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக சுதாகர் பதவியேற்றார்.

மாலை திடீரென்று காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று வடக்கு மண்டல ஜஜி அலுவலகத்தில் இருந்து கட்டளை சென்றுள்ளது.

இதன் பின்னணியில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளார் என்று அனைவருக்கும் தெரியும்.

அவரது கட்சியை சேர்ந்த ஒன்றிய செயலாளர் சக்திவேல் என்பவரைதான் சுதாகர் இன்ஸ்பெக்டர் கடுமையாக தாக்கினார்.

இதனால் கோபம் அடைந்த ராமதாஸ், தனது சட்டக்குழு மூலமாக இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஆணை பிறப்பித்தார்.

மேலும், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோருக்கும் நடந்த சம்பவம் பற்றி கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்துதான் இன்ஸ்பெக்டர் பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று பாமக மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

எது எப்படியோ சாதாரண அப்பாவிகள் மீது சில காவல்துறை அதிகாரிகள் தாக்குதல் நடத்தும் சம்பவம் ஆங்காங்கே நடந்தேறி கொண்டேதான் இருக்கிறது. இனிமேல் தப்பும் செய்யும் காவலர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டால் இது போன்ற குற்றங்கள் நடைபெறாது என்றே கூறலாம். 

Similar News