புகைப்படத்தை வெளியிட்டதற்காக அமைச்சரின் ஆட்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சிவில் இன்ஜினியர்! ஜிதேந்திர அவாத் பங்களாவில் அட்டூழியம்!

புகைப்படத்தை வெளியிட்டதற்காக அமைச்சரின் ஆட்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சிவில் இன்ஜினியர்! ஜிதேந்திர அவாத் பங்களாவில் அட்டூழியம்!

Update: 2020-04-08 03:44 GMT

காவல் நிலையத்திற்கு பதிலாக மகாராஷ்டிரா மந்திரி ஜிதேந்திர அவாத்தின் பங்களாவிற்கு போலீசார் அழைத்துச் சென்றதாக தானேவைச் சேர்ந்த 40 வயதான சிவில் இன்ஜினியர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி மக்களை தீபம் என்ற சொன்ன நிகழ்வின் போது, கோட்பண்டரில் வசிக்கும் அனந்த் கர்முஸ் (40),  என்பவரின் முகத்தில், அவாத்தின் முகத்துடன் இருப்பது போல புகைப்படத்தை மாற்றியிருந்தனர். அந்த  புகைப்படத்தைத் திருத்திய நபருக்கு எதிராக நான் எதிர்ப்பு தெரிவிக்கிறேன் என்று கூறியிருந்தார்.

இதற்கு காவல்துறை மற்றும் அமைச்சரின் முன்னால் மூங்கில் குச்சி மற்றும் பெல்ட்டால் தாக்கப்பட்டதாகவும் கர்முஸ் குற்றம் சாட்டினார்.

மிரர் ஆன்லைனிடம் பேசிய கர்முஸ், "ஞாயிற்றுக்கிழமை இரவு, நான் ஒரு படத்தை வெளியிட்டேன். 12 மணியளவில், இரண்டு போலீஸ்காரர்கள், என் வீட்டிற்கு வந்து, அவர்கள் என்னை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புவதாகக் கூறினார். சில வழக்குகளைப் பற்றி விசாரிக்க கூறினர். எந்த வழக்கைப் பற்றி நான் அவர்களிடம் கேட்டபோது, அவர்கள் எதுவும் சொல்ல மறுத்துவிட்டார்கள். நான் நாளை காவல் நிலையத்திற்கு வருவேன் என்று அவர்களிடம் சொன்னேன். இருப்பினும், அவர்கள் உடனடியாக அழைத்துச்சென்றனர்.

ஆனால் காவல் நிலையத்திற்கு அழைத்துச்செல்லாமல் மகாராஷ்டிரா மந்திரி ஜிதேந்திர அவாத்தின் பங்களாவிற்கு கூட்டிச் சென்றனர். "அங்கு சென்றதும், ஏற்கனவே 10 முதல் 15 ஆண்கள் இருந்தனர், பாதுகாப்பு காவலர் அமைச்சருக்கு தகவல் கொடுத்தார், விரைவில் அந்த நபர்கள் என்னை அடிக்கத் தொடங்கினர். குச்சி உடைந்தபின் அவர்கள் என்னை லத்தீஸ், பெல்ட் மற்றும் மூங்கில் கொண்டு அடித்தனர் என்று கூறியுள்ளார்.




 


 

 

 

Similar News