ஒவ்வொரு முறை பதிலடி கொடுக்கப்பட்டும் திருந்தாத காங்கிரஸ் - சமீபத்தில் பரப்பிய போலி செய்தி : நிரபராதியான பா.ஜ.க.!

ஒவ்வொரு முறை பதிலடி கொடுக்கப்பட்டும் திருந்தாத காங்கிரஸ் - சமீபத்தில் பரப்பிய போலி செய்தி : நிரபராதியான பா.ஜ.க.!

Update: 2019-07-16 10:33 GMT

அனைத்து இந்திய மகிளா காங்கிரஸ் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கின் பதிவு ஒன்று வைரலாகியுள்ளது. வைரல் பதிவில் வரதட்சணையின் நன்மைகள் எனும் தலைப்பு கொண்ட படம் இடம்பெற்றிருக்கிறது. இதில் வரதட்சணை பெறுவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.


இந்த பதிவு குஜராத் கல்வி முறையை பாருங்கள் என்றவாக்கில் துவங்குகிறது. குஜராத்தில் வரதட்சணை முறை எவ்வாறு கற்பிக்கப்படுகிறது என்ற கேள்வி எழுப்பப்பட்டுளளது. இதில் முதல்வர் விஜய் ரூபானியின் அலுவலகம் டேக் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் வரதட்சணை தடுப்பு சட்டம் பற்றிய விவரங்களும் இடம்பெற்றிருக்கின்றன.


வைரல் பதிவின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ததில் அனைத்து இந்திய மகிளா காங்கிரஸ் பதிவு செய்திருக்கும் புகைப்படம் இரண்டு ஆண்டுகள் பழையது என கண்டறியப்பட்டுள்ளது. இந்தபாடம் பெங்களூரு கல்லூரி ஒன்றில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இதனால் இது குஜராத்தில் பின்பற்றப்படவில்லை என்பதும் தெளிவாகியுள்ளது.





பெங்களூருவின் செயின்ட் ஜோசப் கல்லூரியில் இந்தியாவில் வரதட்சணை கொடுமை பற்றி மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் நோக்கில் இது வழங்கப்பட்டது. இதுபற்றி பல்வேறு செய்தி நிறுவனங்கள் அக்டோபர் 2017 ஆம் ஆண்டு பரவலாக செய்தியாக்கி இருக்கின்றன.


இந்த சம்பவம் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது அரங்கேறியது. கல்லூரி நிர்வாகம் குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்வதாக அறிவித்திருந்தது. தற்சமயம் வைரலாகி இருக்கும் புகைப்படம் இரண்டு ஆண்டுகள் பழையது என உறுதியாகியிருக்கிறது. இது பெங்களூரு கல்லூரியில் எடுக்கப்பட்டதாகும்.


அந்த வகையில் தற்சமயம் வைரலாகும் படத்தில் எவ்வித உண்மையும் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.


Similar News