கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு பிறந்த குழந்தைக்கு கொரோனா தொற்று இல்லை.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு பிறந்த குழந்தைக்கு கொரோனா தொற்று இல்லை.

Update: 2020-04-04 14:24 GMT

டெல்லி எய்ம்ஸ் மருத்துவர் மற்றும் அவரது கர்ப்பிணி மனைவி கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு கொரோனா தொற்று இல்லை.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவருக்கு சென்ற சில நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதனையடுத்து அவரை தனித்தன்மை வைக்கப்பட்டனர். இதன் பிறகு அவருடைய மனைவிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டு அவரை தனித்தன்மையில் வைக்கப்பட்டு மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் வைத்து வந்தனர்.

இதனிடையே நேற்று ஏப்ரல் 3ஆம் தேதி நேற்று இரவு மருத்துவரின் மனைவிக்கு சிசேரியன் முறையில் பிரசவம் பார்க்கப்பட்டு அதில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தைக்கு கொரோனா வைரஸ் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்த ஜோடிக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்துள்ளது இதுவே முதல் முறை.

இதனைப்பற்றி எய்ம்ஸ் மருத்துவ கண்காணிப்பாளர் பேசுகையில்: மருத்துவரின் மனைவிக்கு சிசேரியன் முறையில் பிரசவம் பார்க்கப் பட்டு அதில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. கொரோனா வைரஸ் பரவாமல் பாதுகாக்ககும் உடைகளை அணிந்து. மருத்துவரின் மனைவிக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. தற்போது தாய் மற்றும் குழந்தை இருவரும் நலமுடன் இருக்கிறாரகள். இவ்வாறு அவர் கூறினார்.

Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2515128

Similar News