கார்ப்பரேட் வரி குறைப்பு எதிரொலி : மாருதி உட்பட அனைத்து கார்களின் விலையும் குறைகிறது!!

கார்ப்பரேட் வரி குறைப்பு எதிரொலி : மாருதி உட்பட அனைத்து கார்களின் விலையும் குறைகிறது!!

Update: 2019-09-24 10:03 GMT

கார்ப்பரேட் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. இதை அடுத்து தங்கள் நிறுவன கார்கள் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், ஓரிரு நாளில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது


வாகன விற்பனை குறைவால் ஆட்டோ மொபைல் துறை பாதிக்கப்பட்டு வருகிறது. கார்கள், டூ வீலர்  மற்றும் இதர மோட்டார் வாகன விற்பனையும்  கணிசமாக சரிந்து விற்பனை மந்தமானது. இதை அடுத்து விற்பனையை மீண்டும் சரி செய்யும் வகையில் இத்துறையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு கார் நிறுவனங்கள்கோரிக்கை விடுத்தன.


இதையடுத்து கார்ப்பரேட் வரியை குறைப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்தார். அதன்படி கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனம் செலுத்தும் கார்ப்பரேட் வரி 34.9 விழுக்காட்டில் இருந்து 25.2 விழுக்காடாக குறைக்கப்பட்டது.
இதனால் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி குறையும் என்பதால், கார்கள் விலையை குறைக்க மாருதி சுசுகி நிறுவனம் தயாராகி வருகிறது. மேலும் இந்த விலை குறைப்பு சம்மந்தமான அறிவிப்புகள் ஓரிரு நாட்களில் வெளி வரும் என மாருதி சுசுகி இந்தியா நிறுவன தலைவர் ஆர்.சி பார்கவா அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து விரைவாக முடிவெடுப்பது அவசியம் என்று கூறிய அவர், மாதக் கணக்கில் காத்திருக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். மாருதி சுசுகியை போல் ஹூண்டாய், ஹோண்டா, டொயொட்டோ போன்ற நிறுவனங்கள் தள்ளுபடியையும், இதர பலன்களையும் அளிக்க முடிவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=528517


Similar News