பரிசோதனை முடிவுக்காக காத்திராமல் கொரோனோ அறிகுறியுடன் இறந்தவரின் உடலை உடனே ஒப்படைக்க வேண்டும் - மத்திய அரசு.! சுற்றறிக்கை #Covid19 #ModiGovt

பரிசோதனை முடிவுக்காக காத்திராமல் கொரோனோ அறிகுறியுடன் இறந்தவரின் உடலை உடனே ஒப்படைக்க வேண்டும் - மத்திய அரசு.! சுற்றறிக்கை #Covid19 #ModiGovt

Update: 2020-07-03 02:59 GMT

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனாவுக்கு தினமும் நூற்றுக்கணக்கில் பலி ஏற்பட்டு வருகிறது. இவ்வாறு உயிரிழப்போரின் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்வதில் மத்திய அரசு பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது. எனவே இந்த உடலுக்கு இறுதிச் சடங்கு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது

அதேநேரம் கொரோனா அறிகுறிகளுடன் இறப்போரின் உடலையும் உறவினர்களிடம் ஒப்படைப்பதில் மருத்துவமனைகள் மிகுந்த தாமதம் ஏற்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக இறந்தவருக்கு கொரோனா பரிசோதனை செய்து, அதன் முடிவு வரும் வரை உறவினர்களை காக்க வைப்பதாக பொதுமக்கள் குழுவை வெளியிடுகின் றனர்

இதைத்தொடர்ந்து, கொரோனா அறிகுறியுடன் இறப்பவருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தாலும் அதற்கான பரிசோதனை முடிவு வரும்வரை காத்திராமல், உடனடியாக உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது

அதேநேரம் அந்த உடலுக்கு இறுதிச் சடங்கு செய்வதில் மத்திய அரசு வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கூறியுள்ளது. இதைப்போல இறந்தவருக்கு பின்னர் கொரோனா உறுதி செய்யப்பட்டால், அவருடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்துதல் போன்ற தேவையான நடவடிக்கைகளை வழக்கம்போல செய்ய வேண்டும் எனவும் அரசு தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் சுகாதாரப் பணிகள் இயக்குனர் டாக்டர் ராஜீவ் கார்க் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Similar News